சென்னை:'பா.ஜ.,வின் கொள்கை, கோட்பாடுகளை, கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடமும் கொண்டு சென்றாலே, தமிழகத்தில் விரைவில், பா.ஜ., ஆட்சியை அமைக்க முடியும்' என, பா.ஜ., நிர்வாகிகள் கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்றிரவு நடந்த, தமிழக பா.ஜ., நிர்வாகிகள் கூட்டத்தில், அமித் ஷா, பல்வேறு அறிவுகளை வழங்கி பேசினார்.அவர் பேசியது குறித்து, கட்சி நிர்வாகிகள் கூறியதாவது: வடகிழக்கு மாநிலங்களில், பா.ஜ., ஆட்சி அமைத்தது. அங்கு வேகமாக வளர்ந்தது.ஒரு சதவீதத்திற்கும் குறைவான ஓட்டு இருந்த, அசாம் மாநிலத்தில், பா.ஜ., ஆட்சியை கொண்டு வர முடிந்தது. அதேபோல், தமிழகத்திலும் ஆட்சி அமைக்க முடியும்.பிரபலங்களை கொண்டு, ஆட்சியை பிடிக்க வேண்டிய அவசியமில்லை.
பா.ஜ., கொள்கை, கோட்பாடுகளை, தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் கொண்டு சென்றாலே, ஆட்சியை பிடிக்க முடியும். கூட்டணி குறித்து யாரும் கருத்து கூற வேண்டாம். கட்சி மேலிடம் முடிவு செய்யும். நிர்வாகிகள் தங்கள் பணிகளை, திறம்பட செய்தாலே போதும். மத்திய அரசின் சாதனைகளை, பொதுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
பிரதமர் மோடியின் செல்வாக்கும், அவரது தலைமையிலான நல்லாட்சியும், ஆட்சி அமைக்க போதும்.அனைத்து நிர்வாகி களும், அவர்களின் வரம்பிற்குட்பட்ட பணிகளை செய்து முடித்தாலே, கட்சி வடகிழக்கு மாநிலங்களை போல், தமிழகத்திலும் ஆட்சி அமைக்க முடியும். நம் காலத்தில், தமிழகத்தில் பா.ஜ., ஆட்சி மலரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.இவ்வாறு, அவர் பேசியதாக, கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement