அரசியல் செய்தி

தமிழ்நாடு

நவீன தீண்டாமையை தி.மு.க., கடைப்பிடிக்கிறது: முருகன்

Added : நவ 22, 2020
Share
Advertisement
சென்னை:''ஊழலுக்கு பெயர் போன தி.மு.க., நவீன தீண்டாமையை கடைப்பிடிக்கிறது,'' என, தமிழக பா.ஜ., தலைவர் முருகன் பேசினார். தமிழக பா.ஜ., மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம், சென்னை, லீலா பேலஸ் ஓட்டலில், நேற்று மாலை நடந்தது. கூட்டத்திற்கு தலைமை வகித்த, மாநில தலைவர் முருகன் பேசியதாவது: தி.மு.க., குடும்ப அரசியலை நடத்தி வருகிறது. ஊழலுக்கு பெயர் போன கட்சியாக, தி.மு.க.,

சென்னை:''ஊழலுக்கு பெயர் போன தி.மு.க., நவீன தீண்டாமையை கடைப்பிடிக்கிறது,'' என, தமிழக பா.ஜ., தலைவர் முருகன் பேசினார்.

தமிழக பா.ஜ., மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம், சென்னை, லீலா பேலஸ் ஓட்டலில், நேற்று மாலை நடந்தது. கூட்டத்திற்கு தலைமை வகித்த, மாநில தலைவர் முருகன் பேசியதாவது: தி.மு.க., குடும்ப அரசியலை நடத்தி வருகிறது. ஊழலுக்கு பெயர் போன கட்சியாக, தி.மு.க., திகழ்கிறது. ஸ்டாலின், தினமும் அறிக்கை அரசியல் தான் நடத்துகிறார். தேசிய கல்வி கொள்கை என்ற, நல்ல திட்டத்தை எதிர்க்கின்றனர்.

ஆனால், தி.மு.க.,வினரின் நடத்தும் பள்ளிகளில், மூன்றாவது மொழி கற்பிக்கப்பட்டு வருகிறது. ஏழை குழந்தைகள், மூன்றாவது மொழியை கற்பதற்கு, தி.மு.க., தடையாக உள்ளது. அக்கட்சி, நவீன தீண்டாமையை கடைப்பிடிக்கிறது.கருப்பர் கூட்டம் என்ற கயவர் கூட்டம், கந்த சஷ்டி கவசத்தை மிக கேவலமாகவும், ஆபாசமாகவும் பேசியது. அக்கூட்டத்தின் பின்னணியில், தி.மு.க., உள்ளது.

கந்த சஷ்டி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நபர், தி.மு.க., - ஐ.டி., அணியில் பணியாற்றி உள்ளார். அதை கண்டிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் வேல் யாத்திரை நடத்துகிறோம். வேல் யாத்திரை, அவசியமானது; அத்தியாவசியமானது.வேல் பூஜையில், 60 லட்சம் பேர் பங்கேற்றனர். அவர்களை சந்திக்கும் வகையில் மேற்கொண்டு வரும், வெற்றிவேல் யாத்திரை, டிச., 5ம் தேதி, திருச்செந்துாரில் நிறைவு பெறுகிறது.

வரும் காலம், பா.ஜ.,வின் காலம். ஓட்டுச்சாவடிகளில், பா.ஜ.,வினரை வலிமைப்படுத்த வேண்டும். வரும் சட்டசபை தேர்தலில், பா.ஜ., வேட்பாளர்கள் வெற்றி பெற்று, சட்டசபையை அலங்கரிப்பர்.இவ்வாறு, அவர் பேசினார்.வெள்ளிவேல், முருகர் சிலை பரிசுகூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேர்தல் வியூகம் தொடர்பான ஆலோசனை மற்றும் அறிவுரைகளை கட்சியினருக்கு வழங்கினார். அவருக்கு, மாநில தலைவர் முருகன், வெள்ளி வேல், முருகர் சிலையை பரிசாக வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X