சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டாஸ்மாக்கை மூட ஊராட்சி தீர்மானம் வழக்கு வேறு அமர்விற்கு மாற்றம்

Added : நவ 22, 2020
Share
Advertisement
மதுரை, நவ. 22-ஊராட்சி தீர்மானம் அடிப்படையில் டாஸ்மாக் கடையை மூட உத்தரவிட தாக்கலான வழக்கு விசாரணையை மூன்று நீதிபதிகள் கொண்ட கூடுதல் அமர்விற்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டிணம் ஊராட்சித் தலைவர் அக்பர் ஜான் பீவி தாக்கல் செய்த பொதுநல மனு:எங்கள் ஊராட்சிக்குட்பட்ட கரிச்சான்குண்டுவில் டாஸ்மாக் கடை உள்ளது. அருகே

மதுரை, நவ. 22-ஊராட்சி தீர்மானம் அடிப்படையில் டாஸ்மாக் கடையை மூட உத்தரவிட தாக்கலான வழக்கு விசாரணையை மூன்று நீதிபதிகள் கொண்ட கூடுதல் அமர்விற்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டிணம் ஊராட்சித் தலைவர் அக்பர் ஜான் பீவி தாக்கல் செய்த பொதுநல மனு:எங்கள் ஊராட்சிக்குட்பட்ட கரிச்சான்குண்டுவில் டாஸ்மாக் கடை உள்ளது. அருகே குடியிருப்புகள், கோயில் உள்ளன. பார் வசதி இல்லாததால், அருகிலுள்ள விளையாட்டு மைதானத்தில் 'குடிமகன்'கள் மது அருந்துகின்றனர். மக்களுக்கு இடையூறு செய்கின்றனர். ஒரு பெண்ணிடம் நகையை பறித்து தப்பினர். திருப்புல்லாணி போலீசார் வழக்குப் பதிந்தனர்.டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி மக்கள் பலகட்ட போராட்டம் நடத்தினர்.

கிராம சபை மற்றும் ஊராட்சி கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ராமநாதபுரம் கலெக்டர், மாவட்ட டாஸ்மாக் மேலாளருக்கு மனு அளித்தோம். தனிநபர் சுதந்திரத்தை பாதுகாக்கும் உரிமையை அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது. இதை பாதிக்கும் வகையில் 'குடிமகன்'களின் செயல்பாடு உள்ளது. ஊராட்சி தீர்மானம் அடிப்படையில் கடையை மூட உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்தார்.நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு: கிராமசபை மற்றும் ஊராட்சி தீர்மானம் அடிப்படையில் டாஸ்மாக் கடையை மூடலாம் என ஒரு அமர்வு உத்தரவிட்டுள்ளது.

இதற்கு மாறாக மற்றொரு அமர்வு மாறுபட்ட உத்தரவை பிறப்பித்துள்ளது. எனவே இவ்வழக்கில் தகுந்த முடிவெடுக்க மூன்று நீதிபதிகள் கொண்ட கூடுதல் அமர்வு விசாரணைக்கு மாற்றப்படுகிறது என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X