பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.250 கோடி மானியம்

Added : நவ 22, 2020
Share
Advertisement
மதுரை : தமிழகத்தில் ரேஷன் கடைகள் நடத்தும் கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.250 கோடி நிலுவை மானியத்தை அரசு வழங்கியது. ரேஷன் கடைகள் நடத்துவதால் அதில் ஏற்படும் இழப்பை சரிக்கட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அரசு மானியம் வழங்குகிறது. 2018 -2019ல் க்கு வழங்க வேண்டிய ரூ.398 கோடி, 2019 -2020 க்கு வழங்க வேண்டிய ரூ.200 கோடி வழங்கப்படாமல் நிலுவையில் இருந்தது.இதனால் கூட்டுறவு சங்கங்களில்

மதுரை : தமிழகத்தில் ரேஷன் கடைகள் நடத்தும் கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.250 கோடி நிலுவை மானியத்தை அரசு வழங்கியது.

ரேஷன் கடைகள் நடத்துவதால் அதில் ஏற்படும் இழப்பை சரிக்கட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அரசு மானியம் வழங்குகிறது. 2018 -2019ல் க்கு வழங்க வேண்டிய ரூ.398 கோடி, 2019 -2020 க்கு வழங்க வேண்டிய ரூ.200 கோடி வழங்கப்படாமல் நிலுவையில் இருந்தது.இதனால் கூட்டுறவு சங்கங்களில் செயல்பாடுகள் முடங்கும் நிலையில் இருந்தன. கூட்டுறவு பண்டகசாலை ஊழியர் சங்கம் உள்ளிட்டவை நிலுவை மானியத்தை விரைவில் வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தின. இந்நிலையில் மொத்தம் ரூ.598 கோடி நிலுவை மானியத்தில் ரூ.250 கோடி வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு கூட்டுறவு பண்டக சாலை ஊழியர்கள் சங்க மாநில பொது செயலாளர் வெங்கடாசலபதி கூறுகையில், “கோரிக்கையை ஏற்று வழங்கிய அரசுக்கு நன்றி. ரூ.250 கோடி மானியம் மூலம் ரேஷன் கடை பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய பணிக்காலப் பயன்கள் தடையின்றி வழங்க முடியும்,” என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X