பொது செய்தி

தமிழ்நாடு

மதுரையில் இருமுடி காணிக்கை : ஐயப்ப சேவா சங்கம் ஏற்பாடு  

Added : நவ 22, 2020
Share
Advertisement
மதுரை : சபரிமலை செல்ல முடியாதோர் இருமுடி காணிக்கை செலுத்த வசதியாக மதுரை கள்ளந்திரி சாஸ்தா முதியோர் இல்ல ஐயப்பன் கோயிலில் காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நெய் அபிஷகேம் செய்ய அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சங்கம் சார்பில் மண்டல மகர விளக்கு விழா காலங்களில் சபரிமலையில் பக்தர்களுக்கு திங்கள் - வெள்ளி 600, சனி, ஞாயிறு 1000 நபர்களுக்கு அரசின்

மதுரை : சபரிமலை செல்ல முடியாதோர் இருமுடி காணிக்கை செலுத்த வசதியாக மதுரை கள்ளந்திரி சாஸ்தா முதியோர் இல்ல ஐயப்பன் கோயிலில் காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நெய் அபிஷகேம் செய்ய அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சங்கம் சார்பில் மண்டல மகர விளக்கு விழா காலங்களில் சபரிமலையில் பக்தர்களுக்கு திங்கள் - வெள்ளி 600, சனி, ஞாயிறு 1000 நபர்களுக்கு அரசின் வழி காட்டுதல்படி அன்னதானம் வழங்கப் படுகிறது.சரல்மேடு, மரக்கூட்டம், சன்னிதானம் பகுதிகளில் 24 மணி நேரமும் ஸ்டெரச்சர் சேவையில் சங்க தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர். பக்தர்கள் மலையேறும் போது உடல்நலக்குறைவு, மாரடைப்பு, மூச்சு திணறல் ஏற்பட்டால் முதலுதவி, ஆக்ஸிஜன் வழங்க 5 இடங்களில் ஆக்ஸிஜன் பார்லர்கள் செயல்படுகிறது.

எரிமேலி, நிலக்கல், பம்பா, சன்னிதானம் பகுதிகளில் தமிழ் மாநில அமைப்பின் சார்பில் 260 பேர் துாய்மைப்பணி செய்கிறார்கள்.கள்ளந்திரி கோயிலுக்கு குழுவாக வருவோர் 99942 95484, 88380 73542 எண்களுக்கு தகவல் தெரிவிக்கலாம். செயலாளர் ஐயப்பன், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, சிவ ராஜன், அலுவலர் சின்னசாமி, நிர்வாகிகள் ஒருங்கிணைக்கிறார்கள் என மாநில தலைவர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X