ரூ. 1.20 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ. 1.20 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்

Added : நவ 22, 2020
Share
பெருங்குடி : துபாயிலிருந்து மதுரை வந்த திருச்சியை சேர்ந்த 2 பெண்கள் உள்ளாடைக்குள் மறைத்து கடத்திவந்த ரூ. 1.20 கோடி மதிப்பிலான தங்கத்தை மதுரை விமான நிலைய சுங்கத்துறை நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர். துபாயிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த பயணிகளில் சிலர் தங்கம் கடத்தி வருவதாக மதுரை விமான நிலைய சுங்கத்துறை

பெருங்குடி : துபாயிலிருந்து மதுரை வந்த திருச்சியை சேர்ந்த 2 பெண்கள் உள்ளாடைக்குள் மறைத்து கடத்திவந்த ரூ. 1.20 கோடி மதிப்பிலான தங்கத்தை மதுரை விமான நிலைய சுங்கத்துறை நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.

துபாயிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த பயணிகளில் சிலர் தங்கம் கடத்தி வருவதாக மதுரை விமான நிலைய சுங்கத்துறை நுண்ணறிவுப் பிரிவினருக்கு தகவல் வந்தது. விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனையிட்ட போது தங்கம் சிக்கவில்லை. திருச்சி ஜெயலானி, ஜெயராணி ஆகியோரை சோதனையிட்டதில் இருவரும் உள்ளாடைக்குள் செயற்கை களிமண்ணிற்குள் மறைத்து 2 கிலோ 300 கிராம் தங்கத்தை கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் 2 பெண்களையும் கைது செய்து விசாரிக்கின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ஒரு கோடியே 19 லட்சத்து 55 ஆயிரத்து 400 ரூபாய் ஆகும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X