பொது செய்தி

தமிழ்நாடு

மாடுகளை தாக்கும் 'பெரியம்மை': விவசாயிகள் கலக்கம்

Added : நவ 22, 2020
Share
Advertisement
வெள்ளகோவில்;வெள்ளகோவில் சுற்று வட்டார பகுதிகளில், நாட்டுப்பசு மற்றும் சிந்து மாடுகளுக்கு, பெரியம்மை நோய் தாக்குதல் ஏற்படுவதால், கால்நடை வளர்ப்போர் கவலையில் உள்ளனர்.வெள்ளகோவில் சுற்று வட்டார பகுதி, லக்கமநாயக்கன்பட்டி பகுதியில், நாட்டுப்பசு மற்றும் சிந்து மாடு ஆகியவற்றுக்கு பெரியம்மை நோய் தாக்கியுள்ளது.கால்நடை மருத்துவர் கூறியதாவது:பெரியம்மை நோய் தாக்குதல்
 மாடுகளை தாக்கும் 'பெரியம்மை': விவசாயிகள் கலக்கம்

வெள்ளகோவில்;வெள்ளகோவில் சுற்று வட்டார பகுதிகளில், நாட்டுப்பசு மற்றும் சிந்து மாடுகளுக்கு, பெரியம்மை நோய் தாக்குதல் ஏற்படுவதால், கால்நடை வளர்ப்போர் கவலையில் உள்ளனர்.வெள்ளகோவில் சுற்று வட்டார பகுதி, லக்கமநாயக்கன்பட்டி பகுதியில், நாட்டுப்பசு மற்றும் சிந்து மாடு ஆகியவற்றுக்கு பெரியம்மை நோய் தாக்கியுள்ளது.கால்நடை மருத்துவர் கூறியதாவது:பெரியம்மை நோய் தாக்குதல் ஏற்பட்டால், உடலில் லேசான தடிப்பு ஏற்படும். தீவனம் சரியாக உண்ணாது; தண்ணீர் குடிப்பதும் குறைந்துவிடும். மாடுகளுக்கு காய்ச்சல் ஏற்படும். பெரியம்மை நோய், கடந்த ஒரு வாரமாக இப்பகுதியில் பரவி வருகிறது. பெரியம்மை நோய் தாக்குதல் ஏற்பட்ட மாடுகளை தனியாக கட்டி, தனியாக தண்ணீர் தொட்டி, தீவனம் வைக்க வேண்டும்பாதிக்கப்பட்ட மாடுகளை, உடனடியாக அரசு கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்று, மருத்துவர் ஆலோசனைப்படி சிகிச்சை வழங்க வேண்டும்.இந்நோய் பரவாமல் தடுக்க வேண்டும். ஒரு சில விவசாயிகள், நாட்டு வைத்தியமாக மாடுகளுக்கு, வெற்றிலை, மிளகு, உப்பு, கருப்பட்டி சேர்த்து வழங்குகின்றனர்; இதனால், நோய் கட்டுக்குள் இருப்பதாக கூறுகின்றனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X