பொது செய்தி

தமிழ்நாடு

தோட்டக்கலை தொழில்நுட்பம் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம்: வரும், 23 முதல் மாவட்டத்தில் அமல்

Added : நவ 22, 2020
Share
Advertisement
திருப்பூர்;தோட்டக்கலை அலுவலர்கள் கிராமங்களுக்கு சென்று, நவீன சாகுபடி தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு வழங்கும், 'உழவர் ஆர்வலர் தொடர்பு திட்டம்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.தோட்டக்கலை அலுவலர்கள், அவர்களுக்கு ஒதுக்கப்படும் கிராம ஊராட்சிகளுக்கு சென்று, 15 நாட்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் உழவர் குழுக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.வயலில், தொழில்நுட்ப

திருப்பூர்;தோட்டக்கலை அலுவலர்கள் கிராமங்களுக்கு சென்று, நவீன சாகுபடி தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு வழங்கும், 'உழவர் ஆர்வலர் தொடர்பு திட்டம்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.தோட்டக்கலை அலுவலர்கள், அவர்களுக்கு ஒதுக்கப்படும் கிராம ஊராட்சிகளுக்கு சென்று, 15 நாட்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் உழவர் குழுக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.வயலில், தொழில்நுட்ப செயல்விளக்கம் அளித்தும், பண்ணை பள்ளிகள் நடத்தியும், கண்டுணர்வு சுற்றுலா மூலம், நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில், இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு ஊராட்சியிலும், 10 முன்னோடி விவசாயிகள் தேர்வு செய்து, சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி பெறுவோர், தோட்டக்கலைத்துறைக்கும், விவசாயிகளுக்கும் இடையே, பாலமாக இருந்து செயல்படுவர்.வட்டார அளவில், உதவி இயக்குனர் தலைமையில், தோட்டக்கலை விரிவாக்க குழு அமைக்கப்பட உள்ளது. பயணதிட்டம், ஆறு மாதத்திற்கு ஒருமுறை, ஏப்., 1 மற்றும் அக்., 1க்கு முன், விவசாயிகள் அறிந்து கொள்ளும் வகையில், உழவன் செயலியில் பதிவேற்றம் செய்யப்படும்.இத்திட்டம், வரும் 23ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வருகிறது. உதவி தோட்டக்கலை அலுவலர்கள், இரண்டு வாரத்துக்கு ஒருமுறை; தோட்டக்கலை அலுவலர் மாதம் ஒருமுறையும், நேரில் செய்து ஆலோசனை வழங்குவர். திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில், காலை, 9:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை, களப்பயணம் மேற்கொள்வர்.தோட்டக்கலை அலுவலர்கள் கூறியதாவது:'வாட்ஸ் ஆப்' மற்றும் இதர சமூக ஊடகங்கள் மூலம், குழுக்களை உருவாக்கி, முக்கியமான தொழில்நுட்பங்கள், செய்திகள், விவசாயிகளுக்கு பகிரப்படும். விவசாயிகளுக்கு பல்வேறு வகையில் உதவியாக இருக்கும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X