பொது செய்தி

தமிழ்நாடு

2 பேருக்கு டெங்கு காய்ச்சல்

Added : நவ 22, 2020
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூரில், 6 வயது சிறுமி உட்பட 2 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவ கல்லுாரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதனிடையே பருவமழை துவக்கம் காரணமாக அவ்வப்போது, மழை பொழிவும் காணப்படுகிறது. சீதோஷ்ண நிலை காரணமாக, தண்ணீர் தேங்கி நிற்காமலும், கொசுப்புழு உற்பத்தி யாவதை தடுக்கவும்

திருப்பூர்:திருப்பூரில், 6 வயது சிறுமி உட்பட 2 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவ கல்லுாரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதனிடையே பருவமழை துவக்கம் காரணமாக அவ்வப்போது, மழை பொழிவும் காணப்படுகிறது. சீதோஷ்ண நிலை காரணமாக, தண்ணீர் தேங்கி நிற்காமலும், கொசுப்புழு உற்பத்தி யாவதை தடுக்கவும் சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.அவ்வகையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர், பெரிச்சிபாளையம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். தற்போது, திருப்பூர் அடுத்த செரங்காட்டைச் சேர்ந்த, 6 வயது சிறுமி, பெருமாநல்லுார் ரோடு எம்.எஸ்., நகரசை சேர்ந்த, 24 வயது ஆண் ஆகியோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மருத்துவ கல்லுாரி டீன் வள்ளி கூறுகையில், ''டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு, குணமடைந்தும் வருகின்றனர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X