பொது செய்தி

தமிழ்நாடு

'எட்டுத்திக்கும் பசியை போக்குவோம்...': திட்டமிட்டு சேவையாற்றும் இளைஞர் கூட்டம்

Updated : நவ 22, 2020 | Added : நவ 22, 2020
Share
Advertisement
காங்கயம் பகுதியில் ஆதரவற்றோரின் பசியை தினமும் போக்கி வரும் இவ்வமைப்பு துவங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது.இதையொட்டி, அந்த அமைப்பினர் நம்மிடம் பகிர்ந்தவை...'பசி' என்ற ஒன்று அனைவருக்கும் சமமானது. அதில், ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசத்தை பார்க்க முடியாது. பசியால் வாடுபவர்கள் பலர் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் அரசு மருத்துவமனை வளாகம் என, மக்கள் அதிகம் கூடும்
 'எட்டுத்திக்கும் பசியை போக்குவோம்...':  திட்டமிட்டு சேவையாற்றும் இளைஞர் கூட்டம்

காங்கயம் பகுதியில் ஆதரவற்றோரின் பசியை தினமும் போக்கி வரும் இவ்வமைப்பு துவங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது.

இதையொட்டி, அந்த அமைப்பினர் நம்மிடம் பகிர்ந்தவை...'பசி' என்ற ஒன்று அனைவருக்கும் சமமானது. அதில், ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசத்தை பார்க்க முடியாது. பசியால் வாடுபவர்கள் பலர் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் அரசு மருத்துவமனை வளாகம் என, மக்கள் அதிகம் கூடும் பிரதான இடங்களில், ஒரு வேளை உணவுக்கு கை ஏந்தும் காட்சியை பார்க்கிறோம்.ஆதரவற்றோர், உடல் நலம் குன்றியோர், குடும்பத்தினரால் கைவிடப்பட்டோர், மனநலம் பாதிக்கப்பட்டோர், என காங்கயம் பகுதியில், ஏறத்தாழ, 35 பேர் ரோட்டோரங்களில் வசிக்கின்றனர்.

இதுபோன்ற நபர்களின் பசியை போக்கும் விதமாக, அவர்களை தேடி சென்று, தினமும் காலை, மதியம் இருவேளை உணவு வழங்கி வருகிறோம்.'பசியை போக்குவோம் காங்கயம் - 1 மற்றும் 2' என இரு குழுக்கள் சேர்த்து, மொத்தம், 500 உறுப்பினர்கள் உள்ளோம். ஒருவருக்கு மாதத்திற்கு, 300 ரூபாய் வரை செலவாகும்.

ஆரம்பத்தில், கஷ்டப்பட்டோம். இப்போது பலர் தங்கள் பிறந்தநாள், திருமண நாள் என முக்கிய தினங்களுக்கு முன்பதிவு செய்து விடுகின்றனர். கொரோனா நேரத்திலும் எங்கள் ஓட்டம் ஓயவில்லை.எதிர்காலத்தில் காங்கயத்தில் தனி இல்லம் அமைத்து ரோட்டோரங்களில் வசிப்பவர்களை தங்க வைத்து அவர்களுக்கு வேண்டிய உதவியை செய்ய வேண்டும் என்ற ஆசை. இதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

பிரபலங்கள் பலர் இதற்கு இடவசதி அமைத்து தர முன்வந்துள்ளனர்.இந்த சேவை தவிர ஆதரவற்ற சடலங்களை அடக்கம் செய்து வருகிறோம். ஓராண்டு நிறைவை முன்னிட்டு உறுப்பினர்கள் அனைவரும் ரத்த தானம் செய்ய உள்ளோம், என்று கூறிய அவர்களை மனமார பாராட்டி விடைபெற்றோம்.

'வலது கை கொடுப்பது, இடது கைக்கு தெரிய கூடாது,' என்ற நன்மொழிக்கேற்ப நண்பர்கள் இணைந்து சேவையாற்றி வருவதை அறிந்த, காங்கயம் வட்டாரத்திலுள்ள பிற அமைப்பினர், தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X