சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மேகமலையில் மீண்டும் நிலச்சரிவு

Added : நவ 22, 2020
Share
Advertisement
தேனி:மேகமலையில், ஏற்கனவே நிலச்சரிவு ஏற்பட்ட, 18வது கொண்டை ஊசி வளைவிற்கு மிக அருகே, மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டது.தேனி மாவட்டம், மேகமலை ஹைவேவிஸ், மேகமலை, மணலாறு, அப்பர்மணலாறு பகுதிகளில் சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.சின்னமனுாரில் இருந்து மேகமலை ஹைவேவிஸ் செல்லும் மலைப்பாதையில், 18வது கொண்டை ஊசி வளைவில், நவ., 18ல் சில நாட்களுக்கு முன் நிலச்சரிவு

தேனி:மேகமலையில், ஏற்கனவே நிலச்சரிவு ஏற்பட்ட, 18வது கொண்டை ஊசி வளைவிற்கு மிக அருகே, மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டது.

தேனி மாவட்டம், மேகமலை ஹைவேவிஸ், மேகமலை, மணலாறு, அப்பர்மணலாறு பகுதிகளில் சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.சின்னமனுாரில் இருந்து மேகமலை ஹைவேவிஸ் செல்லும் மலைப்பாதையில், 18வது கொண்டை ஊசி வளைவில், நவ., 18ல் சில நாட்களுக்கு முன் நிலச்சரிவு ஏற்பட்டது.நெடுஞ்சாலைத் துறையினர், போலீசார் இணைந்து சீரமைத்தனர். மீண்டும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதால், சுற்றுலா வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில், நேற்று காலை ஹைவேவிசில் இருந்து, சின்னமனுாருக்கு தனியார் பஸ் சென்றபோது, ஏற்கனவே நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு மிக அருகே நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த இடத்தை பஸ் கடந்து சென்றதால், ஆபத்து ஏற்படவில்லை.நெடுஞ்சாலைத் துறையினர் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். அனைத்து போக்குவரத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. சில நாட்களுக்கு வாகன போக்குவரத்தை முற்றிலும் நிறுத்தலாமா என, அதிகாரிகள் ஆலோசிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X