பொது செய்தி

தமிழ்நாடு

'மாஜி' வீரர்களுக்கு சம்பளம் பாக்கி கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு

Added : நவ 22, 2020
Share
Advertisement
தஞ்சாவூர்:தஞ்சை மாவட்டத்தில், கோவில் சிலைகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள, முன்னாள் ராணுவ வீரர்களுக்கு, ஆறு மாதங்களாக சம்பளம் வழங்காததால், அவர்கள் வழக்கு தொடர முடிவு செய்துள்ளனர்.தமிழகத்தில் பழமையான கோவில்களில், ஐம்பொன் உள்ளிட்ட தொன்மையான சிலைகளை பாதுகாக்கும் பணியில், தஞ்சை மாவட்டத்தில், முன்னாள் ராணுவ வீரர்கள், 70 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், மாதம், 8,000

தஞ்சாவூர்:தஞ்சை மாவட்டத்தில், கோவில் சிலைகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள, முன்னாள் ராணுவ வீரர்களுக்கு, ஆறு மாதங்களாக சம்பளம் வழங்காததால், அவர்கள் வழக்கு தொடர முடிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் பழமையான கோவில்களில், ஐம்பொன் உள்ளிட்ட தொன்மையான சிலைகளை பாதுகாக்கும் பணியில், தஞ்சை மாவட்டத்தில், முன்னாள் ராணுவ வீரர்கள், 70 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், மாதம், 8,000 ரூபாய் சம்பளம் பெற்று வந்தனர்.கடந்த ஐந்து ஆண்டுகளாக, உயர்த்தப்பட்ட ஊதியத் தொகைக்கான நிலுவை மற்றும் ஆறு மாதங்களாக, சம்பளமும் வழங்கவில்லை.

இது தொடர்பாக, கலெக்டர், துணை முதல்வர், நிதித்துறை செயலர், அறநிலையத் துறை அமைச்சர் என பலரிடம் மனு அளித்தும், பலன் இல்லை. இதையடுத்து, அவர்கள், உயர் நீதிமன்ற கிளையில், வழக்கு தொடர முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து, தஞ்சை மாவட்ட முன்னாள் படைவீரர்கள் கோவில் பாதுகாவலர் நலச்சங்க தலைவர் அறிவழகன் கூறியதாவது:கடந்த, 2016ல் இருந்து நிலுவை தொகை ஒவ்வொருவருக்கும் தலா, 1 லட்சத்து, 200 ரூபாயும், ஆறு மாத சம்பளம், தலா, 48 ஆயிரம் ரூபாய் வீதம், மொத்தம், 33 லட்சத்து, 60 ஆயிரம் ரூபாய் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம். இவ்வாறு, அவர் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X