மதுரையில் இருமுடி காணிக்கை அய்யப்ப சேவா சங்கம் ஏற்பாடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மதுரையில் இருமுடி காணிக்கை அய்யப்ப சேவா சங்கம் ஏற்பாடு

Added : நவ 22, 2020
Share
மதுரை:மதுரையில் இருமுடி காணிக்கை செலுத்த, அய்யப்பா சேவா சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.சபரிமலை செல்ல முடியாதோர், இருமுடி காணிக்கை செலுத்த வசதியாக, மதுரை கள்ளந்திரி சாஸ்தா முதியோர் இல்ல அய்யப்பன் கோவிலில், காலை, 9:00 முதல் மதியம், 1:00 மணி வரை நெய் அபிஷேகம் செய்ய, அகில பாரத அய்யப்ப சேவா சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.சங்கம் சார்பில், மண்டல மகர விளக்கு விழா

மதுரை:மதுரையில் இருமுடி காணிக்கை செலுத்த, அய்யப்பா சேவா சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

சபரிமலை செல்ல முடியாதோர், இருமுடி காணிக்கை செலுத்த வசதியாக, மதுரை கள்ளந்திரி சாஸ்தா முதியோர் இல்ல அய்யப்பன் கோவிலில், காலை, 9:00 முதல் மதியம், 1:00 மணி வரை நெய் அபிஷேகம் செய்ய, அகில பாரத அய்யப்ப சேவா சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.சங்கம் சார்பில், மண்டல மகர விளக்கு விழா காலங்களில், சபரிமலையில், பக்தர்களுக்கு திங்கள் - வெள்ளி, 600, சனி, ஞாயிறு, 1,000 நபர்களுக்கு அரசின் வழிகாட்டுதல்படி அன்னதானம் வழங்கப்படுகிறது.

சரல்மேடு, மரக்கூட்டம், சன்னிதானம் பகுதிகளில், 24 மணி நேரமும் ஸ்டிரெச்சர் சேவையில், சங்க தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.பக்தர்கள் மலையேறும் போது உடல்நலக் குறைவு, மாரடைப்பு, மூச்சு திணறல் ஏற்பட்டால், முதலுதவி, ஆக்சிஜன் வழங்க, ஐந்து இடங்களில் ஆக்சிஜன் பார்லர்கள் செயல்படுகின்றன.

எரிமேலி, நிலக்கல், பம்பா, சன்னிதானம் பகுதிகளில், தமிழ் மாநில அமைப்பின் சார்பில், 260 பேர் துாய்மைப்பணி செய்கின்றனர். 'கள்ளந்திரி கோவிலுக்கு குழுவாக வருவோர், 99942 95484, 8830 73542 எண்களுக்கு தகவல் தெரிவிக்கலாம்' என, சேவா சங்கத்தின் மாநில தலைவர் விஸ்வநாதன் தெரிவித்துஉள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X