அரசியல் செய்தி

தமிழ்நாடு

படகில் சென்று பிரசாரம் 2வது நாளாக உதயநிதி கைது

Added : நவ 22, 2020
Share
Advertisement
நாகப்பட்டினம்:நாகையில் பிரசாரம் மேற்கொண்ட, தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி, நேற்றும் கைது செய்யப்பட்டார்.தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி, 'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்ற தலைப்பில், நேற்று முன்தினம், நாகை மாவட்டம், திருக்குவளையில் பிரசாரத்தை துவக்கினார். டீசல் மானியம்அவரை போலீசார் கைது செய்து, விடுவித்தனர். தொடர்ந்து, கள்ளிமேடு, வேதாரண்யம், தலைஞாயிறு உள்ளிட்ட

நாகப்பட்டினம்:நாகையில் பிரசாரம் மேற்கொண்ட, தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி, நேற்றும் கைது செய்யப்பட்டார்.

தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி, 'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்ற தலைப்பில், நேற்று முன்தினம், நாகை மாவட்டம், திருக்குவளையில் பிரசாரத்தை துவக்கினார். டீசல் மானியம்அவரை போலீசார் கைது செய்து, விடுவித்தனர். தொடர்ந்து, கள்ளிமேடு, வேதாரண்யம், தலைஞாயிறு உள்ளிட்ட பகுதிகளில், இரவு பிரசாரம் செய்தார்.நேற்று காலை, வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு, நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்திற்கு வந்தார். பிரசார வாகனத்தில் இருந்து இறங்கிய உதயநிதி, அங்கிருந்த மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

பின், விசைப்படகில் முகத்துவாரம் வரை சென்றார். அப்போது, மீன் பிடி தொழிலில் உள்ள சிரமங்கள், டீசல் மானியம், போதுமான அளவிற்கு மீன்கள் கிடைக்கிறதா என்பது உட்பட பல கேள்விகளை கேட்டார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசைப்படகில் பயணம் செய்த உதயநிதி, மீண்டும் துறைமுகம் வரும்போது, சிறிது துாரம் விசைப்படகை ஓட்டினார்.

படகில் நிருபர்களிடம் பேசிய உதயநிதி, ''பீஹார் தேர்தல் பிரசாரத்தில் அமித் ஷா, மோடி கலந்து கொண்டனர்; அவர்கள் கைது செய்யப்படவில்லை; அவர்களது பிரசாரம் தடை செய்யப்பட வில்லை. ஆனால், தி.மு.க., பிரசாரம் செய்தால், கொரோனா தொற்று பரவும் எனக் கூறி, பிரசாரத்தை தடை செய்கின்றனர்.

வாக்குவாதம்''முதல்வர் பழனிசாமி., ஆய்வுக் கூட்டம் என்ற பெயரில் பிரசாரம் செய்கிறார். தி.மு.க.,வின் பிரசாரத்தை தடுக்க வேண்டும் என்பதற்காகவே, அ.தி.மு.க., அரசு செயல்படுகிறது,'' என்றார்.

படகில் இருந்து இறங்கிய உதயநிதியை, போலீசார் கைது செய்தனர். இதனால் போலீசாருக்கும், மீனவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அரை மணி நேரம் நடந்த பேச்சுக்கு பின், உதய நிதியை போலீஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்று, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். சில மணி நேரத்தில், அவர் விடுவிக்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X