சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.25 கோடி வரி ஏய்ப்பு அதிகாரிகள் விசாரணை

Added : நவ 22, 2020
Share
Advertisement
கோவை:போலி ரசீது தயாரித்து, 25.4 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்த நபரிடம், ஜி.எஸ்.டி., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.கோவை மண்டல, ஜி.எஸ்.டி., புலனாய்வு அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள, ஓசூர் பிரிவு ஜி.எஸ்.டி., அதிகாரிகளுக்கு பொருட்களை அனுப்பாமலேயே, போலி ரசீது மூலம் வரி ஏய்ப்பு நடப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடந்த, 19ம் தேதி ஓசூரில் உள்ள வணிக நிறுவனங்களில், ஜி.எஸ்.டி.,

கோவை:போலி ரசீது தயாரித்து, 25.4 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்த நபரிடம், ஜி.எஸ்.டி., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மண்டல, ஜி.எஸ்.டி., புலனாய்வு அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள, ஓசூர் பிரிவு ஜி.எஸ்.டி., அதிகாரிகளுக்கு பொருட்களை அனுப்பாமலேயே, போலி ரசீது மூலம் வரி ஏய்ப்பு நடப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடந்த, 19ம் தேதி ஓசூரில் உள்ள வணிக நிறுவனங்களில், ஜி.எஸ்.டி., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது, 141 கோடி ரூபாய் மதிப்பிலான இரும்பு பொருட்களை, ஓசூர் மற்றும் பெங்களூரில் உள்ள நிறுவனங்களுக்கு அனுப்பியது போலவும், ஜி.எஸ்.டி., செலுத்தியது போலவும், போலியாக ரசீது தயாரித்து, 25.4 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்த, 45 வயது நபர் சிக்கினார்.

நெருங்கியவர்கள் பெயரில், ஜி.எஸ்.டி., பதிவுகள் செய்தும், உறவினர்கள், நண்பர்களின், 'பான்' எண்களை கொண்டும், பொருட்களை அனுப்பாமலே வரி ஏய்ப்பு செய்து, அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியது தெரிந்தது. தொடர்ந்து விசாரணை நடப்பதால், அவரது பெயர், விபரங்கள் வெளியிடப்படவில்லை.சோதனையின்போது, போலி ரசீது புத்தகம், காசோலை புத்தகம் கைப்பற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X