சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கல்பாக்கம் பகுதியில் கொலையான பெண் யார்?

Added : நவ 22, 2020
Share
Advertisement
மாமல்லபுரம் : பூந்தண்டலத்தில், காவல் நிலையம் அருகே, கொலையாகி கிடந்த, பெண்ணின் உடலை, போலீசார் கைப்பற்றினர். செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த, பூந்தண்டலம், கிழக்கு கடற்கரை சாலை பகுதியில், சதுரங்கப்பட்டினம் காவல் நிலையம் உள்ளது. இதன் பின்புற வயல்வெளியில், நேற்று முன்தினம் இரவு, பெண்ணின் பிணம் கிடப்பதை அறிந்து, போலீசார் சென்று மீட்டனர். நைட்டி அணிந்திருந்த, 30

மாமல்லபுரம் : பூந்தண்டலத்தில், காவல் நிலையம் அருகே, கொலையாகி கிடந்த, பெண்ணின் உடலை, போலீசார் கைப்பற்றினர்.

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த, பூந்தண்டலம், கிழக்கு கடற்கரை சாலை பகுதியில், சதுரங்கப்பட்டினம் காவல் நிலையம் உள்ளது. இதன் பின்புற வயல்வெளியில், நேற்று முன்தினம் இரவு, பெண்ணின் பிணம் கிடப்பதை அறிந்து, போலீசார் சென்று மீட்டனர். நைட்டி அணிந்திருந்த, 30 வயது மதிக்கத்தக்க பெண், தலையில், கல்லால் தாக்கி, கொலையானது தெரிந்தது. ஒரு நாள் முன்னதாக, இரவில், ஆணுடன் வந்து, அவர்களிடையே ஏற்பட்ட தகராறில், கொலை செய்யப்பட்டிருக்கலாம் என, போலீசார் கருதுகின்றனர். பெண், அவருடன் வந்தவர் யார் என, சதுரங்கப்பட்டினம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X