சம்பவம் செய்தி

தமிழ்நாடு

செங்கையில் ரவுடி கொலை

Added : நவ 22, 2020
Share
Advertisement
செங்கல்பட்டு : ரவுடியை கொலை செய்ததாக, அ.தி.மு.க., பிரமுகர், செங்கல்பட்டு நீதிமன்றத்தில், நேற்று, சரணடைந்தார். செங்கல்பட்டு, பெரியநத்தம், அன்னை அஞ்சுகம் நகரைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் விமல்குமார், 38. ரவுடி. இவர் மீது, ஒரு கொலை வழக்கு உட்பட, 10 வழக்குகள் நிலுவையில் உள்ளன.இந்நிலையில் அவர், நேற்று முன்தினம் இரவு, புறவழிச்சாலையில் நடந்து சென்றார். அப்போது, ஆட்டோ மற்றும்

செங்கல்பட்டு : ரவுடியை கொலை செய்ததாக, அ.தி.மு.க., பிரமுகர், செங்கல்பட்டு நீதிமன்றத்தில், நேற்று, சரணடைந்தார்.

செங்கல்பட்டு, பெரியநத்தம், அன்னை அஞ்சுகம் நகரைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் விமல்குமார், 38. ரவுடி. இவர் மீது, ஒரு கொலை வழக்கு உட்பட, 10 வழக்குகள் நிலுவையில் உள்ளன.இந்நிலையில் அவர், நேற்று முன்தினம் இரவு, புறவழிச்சாலையில் நடந்து சென்றார். அப்போது, ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் உடைய கும்பல், விமல்குமாரின் கழுத்து, தலை ஆகிய பகுதிகளில், சரமாரியாக வெட்டி, கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றது.

தகவலறிந்து வந்த செங்கல்பட்டு நகர போலீசார், சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். செங்கல்பட்டு நகர போலீசார் விசாரித்து வருகின்றனர்.இதற்கிடையில், மேற்கண்ட கொலை வழக்கில் தேடப்படுவதாக கருதி, பட்டரவாக்கம் சிவா, 40, என்ற ரவுடி, செங்கல்பட்டு முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில், நேற்று, சரணடைந்தார். அவரை, 15 நாள், நீதிமன்ற காவலில் வைக்க, நீதிபதி காய்தரிதேவி உத்தரவிட்டார்.

இக்கொலை குறித்து, போலீசார் கூறியதாவது;பட்டரவாக்கம் சிவா, அ.தி.மு.க., பிரமுகர். சில நாட்களுக்கு முன், விமல், மொபைல்போனில், விமல்குமாரையும், அவரது மனைவியும் மிரட்டி, அசிங்கமாக பேசியதாக கூறப்படுகிறது.இதனால், ஆத்திரம் அடைந்த சிவா, நான்கு பேருடன் சேர்ந்து, புறவழிச்சாலைக்கு சென்றார். அவ்வழியே நடந்து வந்த விமல்குமாரை, சிவா தரப்பினர் கொலை செய்தனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X