பொது செய்தி

தமிழ்நாடு

செய்தி சில வரிகளில்...

Added : நவ 22, 2020
Share
Advertisement
காயமடைந்த மயில் மீட்புவாலாஜாபாத்: வாலாஜாபாத் அடுத்த, வில்லிவலம் முச்சந்தியம்மன் கோவில் வளாகத்தில், காலில் காயம் ஏற்பட்ட நிலையில், வண்ண மயில் ஒன்று இருந்தது.இதுகுறித்து, கிராம நிர்வாக அலுவலர், வனத்துறையினருக்கு புகார் அளித்தார். காஞ்சிபுரம் வனசரக அலுவலர் ராமதாஸ், வண்ண மயிலை மீட்டு, காஞ்சிபுரம் கால்நடை அரசு பெரு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தார். இதையடுத்து,

காயமடைந்த மயில் மீட்புவாலாஜாபாத்: வாலாஜாபாத் அடுத்த, வில்லிவலம் முச்சந்தியம்மன் கோவில் வளாகத்தில், காலில் காயம் ஏற்பட்ட நிலையில், வண்ண மயில் ஒன்று இருந்தது.இதுகுறித்து, கிராம நிர்வாக அலுவலர், வனத்துறையினருக்கு புகார் அளித்தார். காஞ்சிபுரம் வனசரக அலுவலர் ராமதாஸ், வண்ண மயிலை மீட்டு, காஞ்சிபுரம் கால்நடை அரசு பெரு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தார். இதையடுத்து, கிண்டி வன காப்பகத்தில், மயில் ஒப்படைக்கப்பட்டது.

இன்று நீரிழிவு முகாம்காஞ்சிபுரம்: பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள், காஞ்சிபுரம் மஹாத்மா லயன்ஸ் சங்கம், டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையம் சார்பில், காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம், மீன்மார்க்கெட் அருகில், இன்று காலை, 7:00 மணி முதல், 12:00 மணி வரை, இலவச நீரிழிவு நோய் மருத்துவ முகாம் நடைபெறுகிறது.இதில், நீரிழிவு நோய்க்கான மருத்துவ நிபுணர்கள், மருத்துவ பரிசோதனை செய்ய உள்ளனர். மேலும் விபரங்களுக்கு, 72002 87742 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலை பணி துவக்கம் திருவாலங்காடு: திருவாலங்காடு அடுத்த, குப்பம்கண்டிகை கிராமத்தில், முல்லை நகர் பகுதியில், 10.50 லட்சம் ரூபாய் மதிப்பில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் கற்கள் சாலை பணிகள் நேற்று துவங்கின.இப்பணிகளை, திருவாலங்காடு ஒன்றிய குழுத் தலைவர் ஜீவா துவக்கி வைத்தார். கற்சாலைப் பணிகள், ஒரு வாரத்திற்குள் முடித்து பொதுமக்கள், பயன்பாட்டிற்கு வாகன ஓட்டிகள் விட வேண்டும் எனவும் ஒன்றிய சேர்மன் உத்தரவிட்டார். நிகழ்ச்சியில், ஊராட்சி தலைவர் தணிகாசலம், ஒன்றிய பொறியாளர் பிரகாசம், பணி மேற்பார்வையாளர் சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X