அரசியல் செய்தி

தமிழ்நாடு

திருவொற்றியூரில் தி.மு.க.,வினர் மறியல்

Added : நவ 22, 2020
Share
Advertisement
திருவொற்றியூர் : பிரசாரம் மேற்கொண்ட உதயநிதி கைது செய்யப்பட்டதை கண்டித்து, தி.மு.க.,வினர் சாலை மறியல் செய்ததால், போக்குவரத்து முடங்கியது. சட்டசபை தேர்தலை முன்னிட்டு, 100 நாள் பிரசாரத்தின், இரண்டாவது நாளான நேற்று, நாகையில் பிரசாரம் மேற்கொண்ட, தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி, கைது செய்யப்பட்டார்.அவரது கைதை கண்டித்து, நேற்று மதியம், திருவொற்றியூர் கிழக்கு பகுதி செயலர்

திருவொற்றியூர் : பிரசாரம் மேற்கொண்ட உதயநிதி கைது செய்யப்பட்டதை கண்டித்து, தி.மு.க.,வினர் சாலை மறியல் செய்ததால், போக்குவரத்து முடங்கியது.

சட்டசபை தேர்தலை முன்னிட்டு, 100 நாள் பிரசாரத்தின், இரண்டாவது நாளான நேற்று, நாகையில் பிரசாரம் மேற்கொண்ட, தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி, கைது செய்யப்பட்டார்.அவரது கைதை கண்டித்து, நேற்று மதியம், திருவொற்றியூர் கிழக்கு பகுதி செயலர் தனியரசு உட்பட, 50க்கும் மேற்பட்டோர், தேரடி, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில், மறியல் செய்தனர்.திருவொற்றியூர் போலீசார், அவர்களை கலைந்து செல்ல வற்புறுத்தினர். மறுக்கவே, பகுதி செயலர் உள்ளிட்ட தி.மு.க.,வினரை குண்டுக்கட்டாக துாக்கி, கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவொற்றியூர் மேற்கு பகுதி செயலர் கே.பி.சங்கர் தலைமையில், நுாற்றுக்கும் மேற்பட்டோர், திருவொற்றியூர் பழைய பேருந்து நிலையம், திருவொற்றியூர் நெடுஞ்சாலையில், மறியல் செய்து கோஷங்கள் எழுப்பினர்.போலீசார் அவர்களை கைது செய்து, தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இரு மறியல் போராட்டங்களால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X