சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குழந்தைகள் தொடர்பான புகாருக்கு ரயில் பயணியரிடம் விழிப்புணர்வு

Added : நவ 22, 2020
Share
Advertisement
சென்னை : ரயிலில் பயணம் செய்யும் போது, குழந்தைகளுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்து, புகார் அளிப்பதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது. இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:ஆண்டுதோறும் நவ., 14 முதல், 20ம் தேதி வரை, 'குழந்தைகள் உரிமை வாரம்' அனுசரிக்கப்படுகிறது. இந்த வாரத்தை முன்னிட்டு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், 'குழந்தைகள் உரிமைகள் தின

சென்னை : ரயிலில் பயணம் செய்யும் போது, குழந்தைகளுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்து, புகார் அளிப்பதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:ஆண்டுதோறும் நவ., 14 முதல், 20ம் தேதி வரை, 'குழந்தைகள் உரிமை வாரம்' அனுசரிக்கப்படுகிறது. இந்த வாரத்தை முன்னிட்டு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், 'குழந்தைகள் உரிமைகள் தின விழா' அனுசரிக்கப்பட்டது. சென்ட்ரல் ரயில் நிலையத்தில், குழந்தைகள் உரிமைகள் தொடர்பாக, வாரம் முழுதும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. மேலும், உரிமைகள் தின விழாவின் போது, ரயிலிலோ, ரயில் நிலைய வளாகத்திலோ தனியாக குழந்தை கண்டறிதல்; பயணத்தின் போது குழந்தையை தவறவிடுதல்; குழந்தைக்கு தொந்தரவு செய்தல் உட்பட, குழந்தைகள் தொடர்பான அனைத்து புகார் அளிப்பதற்கும், உரிய எண்களை தொடர்பு கொள்ள, பயணியர் அறிவுறுத்தப்பட்டனர்.

இதன்படி, தேசிய உதவி எண், 1098; ரயில்வே பாதுகாப்பு படை உதவி எண், 182; ரயில்வே போலீஸ் உதவி எண், 1512 ஆகிய எண்கள் பயணியருக்கு வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில், ரயில்வே போலீஸ், ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள், வெடி குண்டு நிபுணர்கள், பயணியர் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலைய இயக்குனர் உமாசங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.குழந்தைகள் பாதுகாப்பில் ஈடுபடும் அதிகாரிகள் கவுரவிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X