பொது செய்தி

தமிழ்நாடு

'பேக்கேஜிங்' துறையில் வந்தாச்சு புதுமை!

Added : நவ 22, 2020
Share
Advertisement
பேப்பர் உபயோகம் இந்தியாவில் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதற்காக நாம் லட்சக்கணக்கான மரங்களை வெட்ட வேண்டிய ஒரு சூழ்நிலையில் இருக்கிறோம். 'Phi Factory' என்ற 'ஸ்டார் அப்' கம்பெனி கண்டுபிடித்துள்ள 'G-FP' என்ற கெமிக்கல், பேக்கேஜிங் துறைகளில் உபயோகப்படுத்தப்படுகிறது.இந்த துறையில் உபயோகப்படுத்தப்படும் பேப்பரின் எடையை, 21 சதவீதம் குறைக்க உதவுகிறது. அப்படியானால், வெட்டப்படும்
 'பேக்கேஜிங்' துறையில் வந்தாச்சு புதுமை!

பேப்பர் உபயோகம் இந்தியாவில் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதற்காக நாம் லட்சக்கணக்கான மரங்களை வெட்ட வேண்டிய ஒரு சூழ்நிலையில் இருக்கிறோம்.
'Phi Factory' என்ற 'ஸ்டார் அப்' கம்பெனி கண்டுபிடித்துள்ள 'G-FP' என்ற கெமிக்கல், பேக்கேஜிங் துறைகளில் உபயோகப்படுத்தப்படுகிறது.இந்த துறையில் உபயோகப்படுத்தப்படும் பேப்பரின் எடையை, 21 சதவீதம் குறைக்க உதவுகிறது. அப்படியானால், வெட்டப்படும் மரங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

ஒரு டன் பேப்பர் உபயோகப்படுத்தப்படும் போது, நன்கு வளர்ந்த மூன்று மரங்கள் வெட்டப்படுவதை குறைக்க இந்த தொழில்நுட்படம் கண்டிப்பாக கைகொடுக்கும்.இவர்களின் மற்றொரு கண்டுபிடிப்பான 'CORRU BOND' என்ற 'ADHESIVE' அட்டை பெட்டிகள் தயாரிப்பு தொழிலில், அதிக எடைகளை தாங்கும் வகையில் பெட்டிகளை தயாரிக்க உதவுகிறது.

உலகளவில், ஏறத்தாழ, 45 லட்சம் கோடி மதிப்புக்கு, போலியான பொருட்கள் தயாரிப்பதால் இழப்பீடு ஏற்படுகிறது.இதை தடுக்க, ஒரிஜினல் புராடக்ட்களில் அச்சிடும், 'code' களில் உபயோகப்படுத்த, முப்பரிமாண பாதுகாப்பு மை, இவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது, '3DS' இங்க் எனப்படுகிறது. QR code அல்லது BAR CODE ஆகியவைகளை எளிதாக காப்பி செய்ய முடியும். ஆனால், இந்த இங்கை 'code' களில் உபயோகிப்பதன் வாயிலாக எளிதாக காப்பி செய்ய முடியாது.

அதேநேரம், 'ஸ்மார்ட்போன்' வாயிலாகவும் படிக்க இயலும். இதனால் போலியான பொருட்கள் தயாரிப்பு, விற்பனை ஆகியவை கட்டுப்படுத்தப்படுகிறது.இதுபோன்ற பல புதுமையான கண்டுபிடிப்புகளுக்காக பல விருதுகளை பெற்றுள்ளது இந்த 'ஸ்டார்ட் அப்' கம்பெனி. இவர்களின் இணையதளம் www.phifactory.tech. இதில், பல கண்டுபிடிப்பு இடம் பெற்றுள்ளது.

- சேதுராமன் சாத்தப்பன் -

சந்தேகங்களுக்கு: இ-மெயில்: sethuraman.sathappan@gmail.com, அலைபேசி: 98204 51259,

இணையதளம்: www.startupandbusinessnews.com

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X