மசூத் அசார் சகோதரருடன் பயங்கரவாதிகளுக்கு தொடர்பு

Added : நவ 22, 2020
Share
Advertisement
புதுடில்லி:ஜம்மு -காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட நான்கு பயங்கரவாதிகளுக்கும் மசூத் அசாரின் சகோதரர் முப்தி அஸ்காருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.ஜம்மு -காஷ்மீரில் உள்ளதேசிய நெடுஞ்சாலையில்ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த நான்குபயங்கரவாதிகள்பாதுகாப்புப் படையினரால் சமீபத்தில்சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில் கொல்லப்பட்ட

புதுடில்லி:ஜம்மு -காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட நான்கு பயங்கரவாதிகளுக்கும் மசூத் அசாரின் சகோதரர் முப்தி அஸ்காருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

ஜம்மு -காஷ்மீரில் உள்ளதேசிய நெடுஞ்சாலையில்ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த நான்குபயங்கரவாதிகள்பாதுகாப்புப் படையினரால் சமீபத்தில்சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளுக்கும் ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவரும் ஐ.நா.வால் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட மசூத் அசாரின் சகோதரருக்கும் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மசூத் அசாரின் இளைய சகோதரரான முப்தி அஸ்காரின் உத்தரவின்படி காஷ்மீரில் தாக்குதல் நடத்த அந்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது.இதில் ஜெய்ஷ் அமைப்பின் மற்றொரு தளபதியான காரி ஜரார் என்பவருக்கும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மொபைல் போன் உள்ளிட்ட சாதனங்களை ஆய்வு செய்ததில் இது உறுதிப்படுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X