பொது செய்தி

தமிழ்நாடு

அணை ஏரியில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

Added : நவ 22, 2020
Share
Advertisement
பள்ளிக்கரணை : பள்ளிக்கரணையில், 11 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட்டு வரும் அணை ஏரியை பார்வையிட்ட மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ், அப்பணிகளை ஜனவரிக்குள் முடிக்க உத்தரவிட்டார். சென்னை, பள்ளிக்கரணை, அணை ஏரியை புனரமைக்க, மாநகராட்சி சார்பில், விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. அதன்படி, 11 கோடி ரூபாய் செலவில், ஏரியை சீரமைக்க, பிப்ரவரியில் டெண்டர்

பள்ளிக்கரணை : பள்ளிக்கரணையில், 11 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட்டு வரும் அணை ஏரியை பார்வையிட்ட மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ், அப்பணிகளை ஜனவரிக்குள் முடிக்க உத்தரவிட்டார்.

சென்னை, பள்ளிக்கரணை, அணை ஏரியை புனரமைக்க, மாநகராட்சி சார்பில், விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. அதன்படி, 11 கோடி ரூபாய் செலவில், ஏரியை சீரமைக்க, பிப்ரவரியில் டெண்டர் விடப்பட்டது.புனரமைப்பு திட்டத்தில், ஏரியை ஆழப்படுத்தி, கரைகளை பலப்படுத்தி, பக்கவாட்டில் கருங்கல் பதிக்கப்படுகிறது. மேலும், நடைபாதை சுற்றுச்சுவர் அமைக்கப்படுகின்றன.இப்பணிகளில், 55 சதவீதம் நிறைவடைந்த நிலையில், சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ், நேற்று அணை ஏரியில் ஆய்வு மேற்கொண்டார். ஜனவரிக்குள் சீரமைப்பு பணிகளை முடிக்க உத்தரவிட்டார்.அடுத்த கட்டமாக, ஏரிக்கு மழை நீர் வரும் வழித்தடங்களை கேட்டறிந்தார்.மேலும், ஏரிக்குள் சேகரமாகும் நீரின் தன்மையை ஆய்வகம் மூலம்பரிசோதனை நடத்த உத்தர விட்டார்.அடுத்ததாக, பெரிய ஏரியில் இருந்து வரும் பாதையை பார்வையிட்டு, பராமரிக்க உத்தரவிட்டார். மேலும், அப்பகுதி நலச்சங்கத்தினரை சந்தித்து பேசினார்.மேடவாக்கத்தில், ஏரி மண் கொட்டப்பட்ட ஐந்து ஏக்கர் அரசு திறந்தவெளி நிலத்தில், மிவாயாக்கி காடுகள் வளர்க்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X