சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மகன் மரணத்தால் சோகம் தாய் துாக்கிட்டு தற்கொலை

Added : நவ 22, 2020
Share
Advertisement
பழவந்தாங்கல் : உடல் நலக்குறைவால் மகன் இறந்த தகவலை கேட்டு தாங்க முடியாமல், தாய் துாக்கிட்டு தற்கொலை செய்தார். நங்கநல்லுார், பி.வி.நகர், மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர், ரமணிபாய், 72; ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர். இவரது மகள் பிரியா, 34, மகன் ராம்பிரபு, 32. பிரியாவுக்கு திருமணமாகி விட்டது.அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். ராம்பிரபு, பெருங்களத்துாரில் உள்ள, ஐ.டி., நிறுவனம்

பழவந்தாங்கல் : உடல் நலக்குறைவால் மகன் இறந்த தகவலை கேட்டு தாங்க முடியாமல், தாய் துாக்கிட்டு தற்கொலை செய்தார்.

நங்கநல்லுார், பி.வி.நகர், மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர், ரமணிபாய், 72; ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர். இவரது மகள் பிரியா, 34, மகன் ராம்பிரபு, 32. பிரியாவுக்கு திருமணமாகி விட்டது.அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். ராம்பிரபு, பெருங்களத்துாரில் உள்ள, ஐ.டி., நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.அவருக்கு இதயக்கோளாறு பிரச்னை இருந்தது. திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், வேளச்சேரியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் இறந்தார்.

மகன் இறந்த தகவலறிந்து கதறிய ரமணிபாய், நேற்று அதிகாலை, துாக்கிட்டு தற்கொலை செய்தார்.பழவந்தாங்கல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X