வாஷிங்டன்:அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் பட்சத்தில் தேவைப்படும் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளதாக அதிபரின் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் வரும் ஜன. 20ல் பதவியேற்கவுள்ளார்.ஜோ பைடன் வெற்றியை ஏற்க மறுத்துள்ள டிரம்ப் தேர்தலில் தில்லுமுல்லு நடந்ததாக கூறி பல மாகாணங்களில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதனால் ஆட்சி மாற்றம் சுமூகமாக நடைபெறுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
இந்நிலையில் வெள்ளை மாளிகை செய்தி துறை செயலர் கேலெக் மேகினானி செய்தியாளர்களிடம் பேசியதாவது:சட்டப்பூர்வமான ஓட்டுக்கள் ஒவ்வொன்றும் எண்ணப்பட வேண்டும் என்பதில் டிரம்ப் உறுதியாக உள்ளார். அவர் கூறுவதில் உண்மை உள்ளது.அதிபர் மாற்றம் சட்டத்தின் படி ஆட்சி மாற்றம் ஏற்படும்பட்சத்தில் என்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டுமோ அதை டிரம்ப் நிர்வாகம் தேர்தலுக்கு முன்பே செய்துள்ளது. இனியும் செய்யும்.
எனினும் பொது சேவை நிர்வாகம் இன்னும் பைடன் வெற்றியை அங்கீகரிக்கவில்லை. நீதிமன்றங்களில் வழக்குகள் உள்ளன.இவ்வாறு அவர் தெரிவித்தார்.டிரம்ப் தோல்வியை ஒப்புக் கொள்ள மறுத்துள்ளதால் ஆட்சி மாற்றத்தில் பெரும் குழப்பம் ஏற்படும் என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE