பொது செய்தி

தமிழ்நாடு

அன்புடன் பழகும் மலபார் அணில்கள்: பழங்களை வாங்கி ருசிக்கும் ஆச்சரியம்

Added : நவ 22, 2020
Share
Advertisement
குன்னுார்;குன்னுார் சிம்ஸ் பூங்கா அருகே, மலபார் அணில்கள் குடும்பமாக வந்து பழங்களை வாங்கி உண்டு செல்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.நீலகிரி வன உயிரின மண்டலத்தில், 'மலபார் ஜெயின்ட் ஸ்குரில்' எனும், மலை அணில்கள் உள்ளன. குன்னுார் சிம்ஸ்பூங்கா அருகே, நசீமா பேகம் என்பவரின் நடைபாதை பழக்கடைக்கு கடந்த, இரு ஆண்டுகளாக, ஒரு மலபார் அணில் வந்து, சீத்தாபழம், பட்டர் புரூட்,
 அன்புடன் பழகும் மலபார் அணில்கள்: பழங்களை வாங்கி ருசிக்கும் ஆச்சரியம்

குன்னுார்;குன்னுார் சிம்ஸ் பூங்கா அருகே, மலபார் அணில்கள் குடும்பமாக வந்து பழங்களை வாங்கி உண்டு செல்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.நீலகிரி வன உயிரின மண்டலத்தில், 'மலபார் ஜெயின்ட் ஸ்குரில்' எனும், மலை அணில்கள் உள்ளன. குன்னுார் சிம்ஸ்பூங்கா அருகே, நசீமா பேகம் என்பவரின் நடைபாதை பழக்கடைக்கு கடந்த, இரு ஆண்டுகளாக, ஒரு மலபார் அணில் வந்து, சீத்தாபழம், பட்டர் புரூட், பேஷன் புரூட் ஆகியவற்றை ருசித்து செல்வது வாடிக்கையாக இருந்தது.தற்போது, இந்த அணிலுடன் மேலும் இரு அணில்களும் குடும்பமாக வந்து இந்த பழங்களை, ருசித்து உண்கின்றன. வேறு யார் பழங்களை கொடுத்தாலும், வாங்குவதில்லை.நசீமா கூறுகையில்,''அன்பு காட்டினால், எந்த விலங்கும் வளர்ப்பு பிராணிகளை போல் பாசமாக தான் இருக்கின்றன. தற்போது மூன்று, மலை அணில்கள் குடும்பமாக வந்து செல்வது மகிழ்ச்சியாக இருக்கிறது,'' என்றார்.நீலகிரி சுற்றுச்சூழல் மற்றும் கலாசார அறக்கட்டளை (நெஸ்ட்) தலைவர் சிவதாஸ் கூறுகையில், ''மலபார் அணில் மக்களிடம் எளிமையாக, அன்புடன் பழகும். மித வெப்ப மண்டல காடுகளில் காணப்படும் இந்த வகை அணில்கள் அரியவகை உயிரினங்கள்; பாதுகாக்கப்பட வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X