கணவர் குடும்பத்தை கொன்றது எப்படி? சென்னையில் ஜெயமாலா வாக்குமூலம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கணவர் குடும்பத்தை கொன்றது எப்படி? சென்னையில் ஜெயமாலா வாக்குமூலம்

Added : நவ 22, 2020
Share
சென்னை : 'என் கணவரை துப்பாக்கியால் சுடும் போது, நான் பக்கத்தில் தான் இருந்தேன்' என, துப்பாக்கிச் சூடு வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயமாலா, போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னை, சவுகார்பேட்டையைச் சேர்ந்த தலித் சந்த், 74, இவரது மனைவி புஷ்பா பாய், 70, மகன் ஷீத்தல் குமார், 40 ஆகியோர், நவ., 11ல் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த கொலை வழக்கில், ஏற்கனவே, ஷீத்தல்

சென்னை : 'என் கணவரை துப்பாக்கியால் சுடும் போது, நான் பக்கத்தில் தான் இருந்தேன்' என, துப்பாக்கிச் சூடு வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயமாலா, போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை, சவுகார்பேட்டையைச் சேர்ந்த தலித் சந்த், 74, இவரது மனைவி புஷ்பா பாய், 70, மகன் ஷீத்தல் குமார், 40 ஆகியோர், நவ., 11ல் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த கொலை வழக்கில், ஏற்கனவே, ஷீத்தல் குமாரின் மனைவி ஜெயமாலா, அவரது சகோதரர்கள் கைலாஷ், விலாஷ் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.போலீசாரிடம் ஜெயமாலா அளித்துள்ள வாக்குமூலம்:நானும், என் கணவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஷீத்தல் குமார், சற்று மன நலம் பாதிக்கப்பட்டவர். இந்த தகவலை மறைத்து, புரோக்கர் வாயிலாக பெண் பார்த்து, என்னை திருமணம் செய்து கொண்டார்.

வீட்டிலும், என் மாமனார் வைத்தது தான் சட்டம். 'நைட்டி' வாங்க கூட, மாமனாரிடம் தான் பணம் கேட்க வேண்டும். ஷீத்தல் குமார் பெயரளவில் கணவராக இருந்தார்.இரு மகள்கள் பிறந்தவுடன், கணவருக்கு, போதை பொருளான மாவா போடும் பழக்கம் அதிகரித்தது. ஆண்மை குறைவும் இருந்தது. இதனால், வேறு ஒருவருடன் எனக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதை, என் மாமனார், மாமியார் கண்டித்தனர்.ஜாதி ரீதியான பேச்சுக்கும் ஆளானேன். இதனால், மகள்களுடன் புனே சென்றேன். மகள்களின் எதிர்காலம் கருதி, 7 கோடி ரூபாய் ஜீவனாம்சம் கேட்டோம்.'ஒரு பைசா கூட தரமாட்டேன்' எனக்கூறி வந்த என் மாமனார், பின் பிச்சை போடுவது போல, 1.50 கோடி தருவதாக கூறினார்.அந்த பணத்தையாவது தருவார் என, எதிர்பார்த்தேன்; தரவில்லை.

இதனால், மூன்று பேரையும் தீர்த்துக் கட்டினால், சொத்துகள் அனைத்தும், வாரிசுகளான என் மகள்களுக்கு சேரும் என்பதால், செப்டம்பரில் சென்னை வந்து, மூன்று பேரையும் கொல்ல முயற்சி செய்தோம்; முடியவில்லை.பின், நவ., 11ல், புனேவில் இருந்து, இரு கார்களில் சென்னை வந்து, மாமனார், மாமியார், கணவரிடம், இரண்டு துப்பாக்கிகளை காட்டி மிரட்டி, 7 கோடி ரூபாய் கேட்டோம். தர மறுத்துவிட்டனர். இதனால், என் சகோதரர் கைலாஷ், மாமனாரை படுக்கை அறையில், இரு முறை சுட்டார். இதில், அவர் துடிதுடித்து இறந்தார். சத்தம் கேட்டு, என் கணவர் ஓடி வந்தார். நான் தடுத்தேன். அப்போது, என் பக்கத்தில் நின்ற கணவரை, ராஜிவ் உத்தம் ஷிண்டே சுட்டார்.

இதைப்பார்த்து சத்தம்போட்ட என் மாமியாரை, கைலாஷ் சுட்டுக்கொன்றார். பின், புனேவுக்கு காரில் தப்பினோம். அங்கிருந்து, நானும், விலாஷ், ராஜிவ் உத்தம் ஷிண்டே ஆகியோரும், குஜராத் சென்றோம். அங்கு, மொபைல் போனுக்கு சிம் கார்டுகள் வாங்கினோம். அதன் வாயிலாக, போலீசாரிடம் சிக்கிக் கொண்டோம்.இவ்வாறு, வாக்குமூலம் அளித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X