நேந்திரன் விலை கடும் வீழ்ச்சி: வாழை விவசாயிகள் கவலை

Added : நவ 22, 2020
Share
Advertisement
அவிநாசி:நேந்திரன் வாழை விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.தமிழகத்தின் பல பகுதிகளில், நேந்திரன் வாழை சாகுபடி நடக்கிறது. குறிப்பாக, அவிநாசி, அன்னுார், சிறுமுகை, சத்தியமங்கலம் உட்பட பல இடங்களில், 20 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பில், சாகுபடி செய்யப்படுகிறது.அறுவடை செய்யப்படும் நேந்திரன் வாழை, கேரளாவுக்கு, சிப்ஸ் தயாரிக்க அனுப்பப்படுகிறது. தற்போது,

அவிநாசி:நேந்திரன் வாழை விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.தமிழகத்தின் பல பகுதிகளில், நேந்திரன் வாழை சாகுபடி நடக்கிறது. குறிப்பாக, அவிநாசி, அன்னுார், சிறுமுகை, சத்தியமங்கலம் உட்பட பல இடங்களில், 20 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பில், சாகுபடி செய்யப்படுகிறது.அறுவடை செய்யப்படும் நேந்திரன் வாழை, கேரளாவுக்கு, சிப்ஸ் தயாரிக்க அனுப்பப்படுகிறது. தற்போது, நேந்திரன் வாழை அறுவடை துவங்கியுள்ள நிலையில், ஒரு கிலோ, 10 - 12 ரூபாய்க்கு மட்டுமே விற்கப்படுகிறது.விவசாயிகள் கூறியதாவது:தமிழக விவசாயிகளிடம் இருந்து, கேரளா, கர்நாடகா, உ.பி., மாநில விவசாயிகள் வாழை கன்று வாங்கிச்சென்று, பல ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்ய துவங்கிவிட்டனர். கேரளாவில் நீர்ப்பாசன வசதி நிறைவாக இருப்பதால், திருவனந்தபுரம் துவங்கி, காசர்கோடு வரை, வாழை சாகுபடி நடக்கிறது.கேரள மாநில வாழை வர்த்தக சந்தையினர், குறிப்பிட்ட அளவு வாழை மட்டுமே, தமிழகத்தில் இருந்து வாங்க இலக்கு நிர்ணயித்துள்ளனர். இதனால், தமிழக விவசாயிகளின் வாழைக்கு, சந்தை வாய்ப்பு குறைந்துள்ளது.நேந்திரன் விலை குறைந்தாலும், சிப்ஸ், கிலோ, 350 முதல், 400 ரூபாய் வரை விற்கப்படுகிறது. எனவே, தமிழக விவசாயிகளுக்கு, வாழையை, இருப்பு வைத்து விற்பனை செய்ய, குளிரூட்டப்பட்ட கிடங்கு அறையை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X