சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நகராட்சி கமிஷனரை தாக்க முயற்சி 'மாஜி' தலைவரின் சகோதரர் கைது

Added : நவ 22, 2020
Share
Advertisement
திருவேற்காடு : பொது இடத்தில் கழிவுநீர் விடுவதை தடுத்த நகராட்சி கமிஷனரை, மாஜி நகராட்சி தலைவரின் தம்பி தாக்க முயன்ற சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை, திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், நீர்நிலை, மழை நீர் வடிகால் மற்றும் மைதானம் உள்ளிட்ட பொது இடங்களில், கழிவுநீர் விடுவதை, நகராட்சி நிர்வாகம் தடை செய்து உள்ளது. அதை மீறுவோர் மீது, நடவடிக்கை

திருவேற்காடு : பொது இடத்தில் கழிவுநீர் விடுவதை தடுத்த நகராட்சி கமிஷனரை, மாஜி நகராட்சி தலைவரின் தம்பி தாக்க முயன்ற சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை, திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், நீர்நிலை, மழை நீர் வடிகால் மற்றும் மைதானம் உள்ளிட்ட பொது இடங்களில், கழிவுநீர் விடுவதை, நகராட்சி நிர்வாகம் தடை செய்து உள்ளது. அதை மீறுவோர் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என, அறிவிக்கப் பட்டுள்ளது.இந்நிலையில், நேற்று மதியம், டேங்கர் லாரி மூலம் கொண்டு வரப்பட்ட கழிவு நீர், திருவேற்காடு கோலடி ஏரிக்கரையில் விடப்பட்டது. தகவலறிந்த, நகராட்சி கமிஷனர் செந்தில் குமரன், சுகாதார ஆய்வாளர்ஆல்பர்ட் ராஜ் ஆகியோர், அங்கு சென்றனர்.ஏரிக்குள், கழிவு நீர் விடுவதை தடுத்தனர்.

அப்போது, லாரி உரிமை யாளரும், ஓட்டுனருமான, அதே பகுதியைச் சேர்ந்த ரவி, 51, நகராட்சி கமிஷனர் செந்தில்குமாரை தாக்க முயன்றார்.அதற்குள், நகராட்சி ஊழியர்கள், ரவியை தடுத்து, கமிஷனரை மீட்டு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து, செந்தில் குமார், திருவேற்காடு போலீசில் புகார் செய்தார். ரவியை போலீசார் கைது செய்து, அவரது டேங்கர் லாரியை பறிமுதல் செய்தனர். கைதான ரவி, திருவேற்காடுநகராட்சியின் முன்னாள் தலைவர் மகேந்திரனின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X