வாஷிங்டன்:திபெத் நிர்வாக தலைவர் டாக்டர் லாப்சங் சங்கே முதல்முறையாக அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு நேற்று முன் தினம் வருகை புரிந்தார்.
நம் அண்டை நாடான சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தின் மத்திய திபெத் நிர்வாக தலைவராக டாக்டர் லாப்சங் சங்கே பொறுப்பு வகித்து வருகிறார்.நாடு கடந்த அரசு என அழைக்கப்படும் மத்திய திபெத் நிர்வாகம் இந்தியாவின் தர்மசாலாவில் இருந்து இயங்கி வருகிறது.இதன் தலைவர் டாக்டர் லாப்சங் சங்கே அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு நேற்று முன் தினம் சென்றார்.
கடந்த 60 ஆண்டுகளில் திபெத்தை சேர்ந்த அரசியல் தலைவர் வெள்ளை மாளிக்கை வருவது இதுவே முதல்முறை.திபெத் விவகாரங்களை கவனிப்பதற்காக அமெரிக்க அரசு புதிதாக நியமித்துள்ள சிறப்பு ஒருங்கிணைப்பாளர் ராபர்ட் டெஸ்ட்ரோவை சந்திப்பதற்காக டாக்டர் லாப்சங் அழைக்கப்பட்டார்.
சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதாக சீனா ஏற்கனவே குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில் இந்த சந்திப்பு சீனாவை மேலும் ஆத்திரமடைய செய்யும் என கருதப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE