அரசியல் செய்தி

தமிழ்நாடு

கோவில்களில் ஆளுங்கட்சியினர் அட்டகாசம்

Added : நவ 22, 2020
Share
Advertisement
சென்னை: தமிழக கோவில்களில் அறநிலையத்துறை அதிகாரிகளை மிரட்டுவது கட்டுப்பாடுகளை மீறுவது என ஆளுங்கட்சியை சேர்ந்த உள்ளூர் அரசியல்வாதிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தேர்தல் நெருங்கும் நிலையில் மக்களிடம் அவப்பெயர் ஏற்படுவதை தடுக்க சாட்டையை சுழற்றி முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.தமிழகத்தில் அறநிலையத்துறை

சென்னை: தமிழக கோவில்களில் அறநிலையத்துறை அதிகாரிகளை மிரட்டுவது கட்டுப்பாடுகளை மீறுவது என ஆளுங்கட்சியை சேர்ந்த உள்ளூர் அரசியல்வாதிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தேர்தல் நெருங்கும் நிலையில் மக்களிடம் அவப்பெயர் ஏற்படுவதை தடுக்க சாட்டையை சுழற்றி முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 29 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. இவற்றில் பிரசித்தி பெற்ற பெரிய கோவில்கள் நுாற்றுக்கணக்கில் உள்ளன. இதுபோன்ற கோவில்களில் 'நாங்கள் ஆளுங்கட்சியினர்' எனக்கூறி உள்ளூர் அரசியல்வாதிகளின் செய்யும் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

திருவண்ணாமலைஇதற்கு உதாரணம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடந்த சம்பவம். சில தினங்களுக்கு முன் அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றும் விழா அதிகாலை நடந்தது.சம்பிரதாய முறைப்படி உரிய நேரத்தில் கொடியேற்ற வேண்டும். அறநிலையத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் உரிய நேரத்தில் வரவில்லை. நல்லநேரம் முடிந்து விடக்கூடாது என குறிப்பிட்ட நேரத்தில் சிவாச்சாரியார்கள் கொடியை ஏற்றினர்.

தாமதமாக கட்சியினருடன் அமைச்சர் கோவிலுக்கு வந்தார். அவர் வரும் முன் கொடியேற்றப்பட்டதை அறிந்த அ.தி.மு.க. நகர செயலர் செல்வம் அமைச்சர் முன் தன் கெத்தை காட்டுவதாக நினைத்து சிவாச்சாரியார்கள், அறநிலையத்துறை அதிகாரிகளை அனைவர் முன்னிலையிலும் பகிரங்கமாக மிரட்டினார்.இது அங்கு குழுமியிருந்த பக்தர்களிடம் அதிருப்தியையும் முக சுளிப்பையும் ஏற்படுத்தியது. இந்த கோவிலில் இதுபோன்று ஆளுங்கட்சியினர் ஆதிக்கம் அவ்வப்போது நடந்து வருகிறது. அத்துமீறல் அதிகரிப்புதமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களில் ஆளும் கட்சியினர், கருவறை வரை செல்வது; பக்தர்களின் வரிசையை மீறி எதிர் திசையில் செல்வது; தரிசனத்திற்கான கட்டணம் செலுத்த மறுப்பது; அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள் அறநிலையத்துறை அதிகாரிகளை மிரட்டுவது; முறைகேடுகளில் ஈடுபடுவது போன்ற அடாவடி செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.குறிப்பாக கும்பாபிஷேகம், திருவிழாக்கள், விஷேச நாட்களில் இவர்களின் அட்டகாசம் எல்லை மீறி செல்கிறது. முதல்வர் இவர்களை கட்டுப்படுத்தாவிடில் ஆளும்கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுவதை தடுக்க முடியாது.

கமிஷனரின் எளிமை அறநிலையத்துறை புதிய கமிஷனராக பொறுப்பேற்ற பிரபாகர் பொறுமை, சிந்தித்து செயல்படுவது; அனைவரையும் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது என சாமர்த்தியமாக செயல்படுகிறார்.சமீபத்தில் நடந்த ஆட்சேபனை கூட்டத்தில் சிலர் அவரை மட்டம் தட்டி பேசினாலும் பெருந்தன்மையுடன் சகித்துக் கொண்டார். சமீபத்தில் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலுக்கு சென்ற அவர் பக்தர்களோடு பக்தர்களாக வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து மற்றவர்களுக்கு உதாரணமாக விளங்கினார்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X