அரசியல் செய்தி

தமிழ்நாடு

கோவையில் இன்று காங்., விவசாயிகள் எழுச்சி மாநாடு

Added : நவ 22, 2020
Share
Advertisement
சோமனுார்:காங்., சார்பில் விவசாயிகள் பாதுகாப்பு எழுச்சி மாநாடு, இன்று கோவையில் நடக்கிறது.கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில், வடக்கு மாவட்ட காங்., கட்சி சார்பில், விவசாயிகள் பாதுகாப்பு எழுச்சி மாநாடு இன்று மாலை, 3:00 மணிக்கு துவங்குகிறது.விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரியும் விவசாயிகளின் உரிமைகளை மீட்டெடுக்கும்

சோமனுார்:காங்., சார்பில் விவசாயிகள் பாதுகாப்பு எழுச்சி மாநாடு, இன்று கோவையில் நடக்கிறது.கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில், வடக்கு மாவட்ட காங்., கட்சி சார்பில், விவசாயிகள் பாதுகாப்பு எழுச்சி மாநாடு இன்று மாலை, 3:00 மணிக்கு துவங்குகிறது.விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரியும் விவசாயிகளின் உரிமைகளை மீட்டெடுக்கும் வகையில் இந்த மாநாடு நடக்கிறது.கோவை வடக்கு மாவட்ட காங்., தலைவர் மனோகரன் கூறுகையில், ''கருமத்தம்பட்டி -- சோமனூர் ரோட்டில் நாளை (இன்று) மாலை, 3:00 மணிக்கு நடக்கும் விவசாயிகள் பாதுகாப்பு எழுச்சி மாநாட்டில், மாநில தலைவர் அழகிரி தலைமை வகிக்கிறார். காங்., தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ்,அகில இந்திய செயலாளர்கள் சஞ்சய்தத், சிரிவல்ல பிரசாத், செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம், முன்னாள் மத்திய அமைச்சர்கள் எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்கின்றனர். மாநாட்டின் நிறைவில், ஏர் கலப்பையுடன் விவசாயிகள் பேரணி நடக்கிறது.இவ்வாறு, மனோகரன் கூறினார்.மாநாட்டு ஏற்பாடுகளை பார்வையிட வந்த, காங்., தேசிய செயலாளர்சஞ்சய்தத் கூறுகையில், ''ஆளும் கட்சியினர் நடத்தும் விழாக்களில் விதிகள் பின்பற்றப்படுவதில்லை. எதிர்கட்சிகள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கின்றனர். அ.தி.மு.க.,அரசை மக்கள் புறக்கணிக்கும் காலம் விரைவில் வரவுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X