சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இறந்த புலி அருகே 2 குட்டிகள் மீட்பு

Added : நவ 22, 2020
Share
Advertisement
கூடலுார்:முதுமலை, சிங்காரா வனப்பகுதியில், இறந்த பெண் புலி அருகே, இரண்டு குட்டிகளை, உயிருடன் வனத்துறையினர் மீட்டனர்.நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், சிங்காரா வனச் சரகம் சீமர்குழி ஒடை பகுதியில், நேற்று முன்தினம், பெண் புலி மர்மமான முறையில், இறந்து கிடைப்பதை வனத்துறையினர் பார்த்தனர். இரவில் அதன் உடலை வன ஊழியர்கள் கண்காணித்து பாதுகாத்தனர்.நேற்று முதுமலை
 இறந்த புலி அருகே 2 குட்டிகள் மீட்பு

கூடலுார்:முதுமலை, சிங்காரா வனப்பகுதியில், இறந்த பெண் புலி அருகே, இரண்டு குட்டிகளை, உயிருடன் வனத்துறையினர் மீட்டனர்.நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், சிங்காரா வனச் சரகம் சீமர்குழி ஒடை பகுதியில், நேற்று முன்தினம், பெண் புலி மர்மமான முறையில், இறந்து கிடைப்பதை வனத்துறையினர் பார்த்தனர். இரவில் அதன் உடலை வன ஊழியர்கள் கண்காணித்து பாதுகாத்தனர்.நேற்று முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கவுசல் மற்றும் அலுவலர்கள், அதன் உடலை ஆய்வு செய்தனர்.புலி இறந்த இடத்திலிருந்து, சிறிது தொலைவில், அதன் இரண்டு ஆண் புலிக்குட்டிகள் தவித்து கொண்டிருப்பதை கண்டு, வனத்துறையினர் மீட்டனர்.கால்நடை டாக்டர்கள் புலி குட்டிகள் உடலை ஆய்வு செய்து, தெப்பக்காடு கால்நடை மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்.புலிகள் காப்பக துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் கூறுகையில், ''மீட்கப்பட்ட புலியின் குட்டிகள், ஆரோக்கியத்துடன் உள்ளன. பிறந்து, 20 நாட்கள் இருக்கும். இறந்த பெண் புலிக்கு எட்டு வயது இருக்கும். உடல் கூராய்வு அறிக்கை கிடைத்த பின்பே, இறப்பு காரணம் தெரியவரும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X