பொது செய்தி

தமிழ்நாடு

மருதமலை கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

Added : நவ 22, 2020
Share
Advertisement
வடவள்ளி:மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழாவையொட்டி, திருக்கல்யாண உற்சவம் நடந்தது.முருகனின் ஏழாம் படை வீடாக, மருதமலை சுப்ரமணியசுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலில், கடந்த, 15ம் தேதி காப்பு கட்டுதலுடன், கந்த சஷ்டி விழா துவங்கியது. விழாவின் ஆறாம் நாளான நேற்று முன்தினம், சூரசம்ஹாரம் நடந்தது. கொரோனா தொற்று காரணமாக, பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்
 மருதமலை கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

வடவள்ளி:மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழாவையொட்டி, திருக்கல்யாண உற்சவம் நடந்தது.முருகனின் ஏழாம் படை வீடாக, மருதமலை சுப்ரமணியசுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலில், கடந்த, 15ம் தேதி காப்பு கட்டுதலுடன், கந்த சஷ்டி விழா துவங்கியது. விழாவின் ஆறாம் நாளான நேற்று முன்தினம், சூரசம்ஹாரம் நடந்தது. கொரோனா தொற்று காரணமாக, பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என, கோவில் நிர்வாகம் தெரிவித்திருந்தது.கந்தசஷ்டி விழாவின் இறுதி நாளான நேற்று, திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று காலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. காலை, 6:00 மணிக்கு, சுப்ரமணிய சுவாமி, ராஜ அலங்காரத்துடன் காட்சி அளித்தார்.காலை, 8:30 மணிக்கு, வள்ளி, தெய்வானை, சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடந்தது. அதன்பின், வள்ளி, தெய்வானை சமேதராக, சுப்ரமணிய சுவாமி பல்லக்கில் திருவீதி உலா வந்தார்.திருக்கல்யாணத்தை ஒட்டி, காலை, 7:00 முதல் 10:30 மணி வரை கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அதன்பின், பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சுவாமி தரிசனம் செய்தனர். கந்த சஷ்டி விரதமிருந்த பக்தர்கள், நேற்று தங்களது விரதங்களை நிறைவு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X