அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஹீரோவான உதயநிதி துரைமுருகன் பேட்டி

Added : நவ 22, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
வேலுார்:''உதயநிதியை கைது செய்ததன் மூலம், அவரை ஹீ‍ரோ ஆக்கி விட்டனர்,'' என, தி.மு.க., பொதுச் செயலர் துரைமுருகன் கூறினார்.வேலுார் மாவட்டம், காட்பாடியில், அவர் கூறியதாவது:அரசு பள்ளியில் படித்து, 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் இடம்பிடித்த மாணவர்களுக்கு, முழு கல்வி கட்டணத்தை, தி.மு,க., ஏற்கும் என, முதலில் ஸ்டாலின் தான் அறிவித்தார்.அதன்பின் தான்,

வேலுார்:''உதயநிதியை கைது செய்ததன் மூலம், அவரை ஹீ‍ரோ ஆக்கி விட்டனர்,'' என, தி.மு.க., பொதுச் செயலர் துரைமுருகன் கூறினார்.

வேலுார் மாவட்டம், காட்பாடியில், அவர் கூறியதாவது:அரசு பள்ளியில் படித்து, 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் இடம்பிடித்த மாணவர்களுக்கு, முழு கல்வி கட்டணத்தை, தி.மு,க., ஏற்கும் என, முதலில் ஸ்டாலின் தான் அறிவித்தார்.அதன்பின் தான், கல்வி கட்டணத்தை ஏற்பதாக, அரசு அறிவித்தது.

இந்த அரசு, ஸ்டாலின் வழியில் நடக்கிறதா, அவர்களுக்கு சுய சிந்தனை இல்லையா?தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட உதயநிதியை கைது செய்து, அவரை ஹீரோ ஆக்கி விட்டனர். எங்களுக்கு நல்ல விளம்பரத்தை தேடி கொடுத்து விட்டனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னைக்கு வந்தபோது, அவர் மீது பதாகை வீசி தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது.

ஜெயலலிதாவுடன் கருத்து வேறுபாடு இருந்தாலும், எல்லா துறைகளை பற்றிய அறிவும், திறமையும் இருந்ததால், அவரை பாராட்டினோம். ஜெயலலிதாவின் ஆளுமையே வேறு. அவரின் நிழலுக்கு கூட, தற்போதைய ஆட்சியாளர்கள் வர மாட்டார்கள். தி.மு.க., கூட்டணி குறித்து, இதுவரை எந்த பேச்சும் நடத்தவில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce -  ( Posted via: Dinamalar Android App )
22-நவ-202007:47:03 IST Report Abuse
oce ஜெய லலிதா நிழலைக் கூட தொட எவருக்கும் அருகதை இல்லை என்று இப்போது மக்கள் ஓட்டு வங்கியை பறிக்கும் சூழ்ச்சியில் பெனாத்தும் துரை முருகன் சட்ட மன்றத்தில் அவரை ஒரு கட்சி தலைவர் என்ற மரியாதை இன்றி ஒரு பெண் என்றும் பாராமல் பகிரங்கமாக அவர் கட்டி இருந்த சேலையை பிடித்து எற்காக இழுத்தார். இதை எல்லாரும் கேளுங்கப்பா.தேர்தலில் திமுகவை தோற்கடியுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X