பொது செய்தி

தமிழ்நாடு

லண்டனில் மீட்கப்பட்ட சிலைகள் அனந்தமங்கலத்தில் ஒப்படைப்பு

Added : நவ 22, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
மயிலாடுதுறை:லண்டனில் மீட்கப்பட்ட சுவாமி சிலைகள், நேற்று அனந்தமங்கலம் ராஜகோபால சுவாமி கோவிலுக்கு கொண்டு வரப்பட்டன.நாகை மாவட்டம், பொறையாறு அருகே, அனந்தமங்கலத்தில், ராஜகோபால சுவாமி கோவில் உள்ளது. கோவிலின் மகா மண்டபத்தில் இருந்த ராமர், லட்சுமணர், சீதை மற்றும் அனுமன் ஆகிய நான்கு பழமையான சிலைகள், 1978ம் ஆண்டு நவம்பர், 23ம் தேதி திருட்டு போனது.இவ்வழக்கு, 1988ம் ஆண்டு ஜனவரி, 25ம்
 லண்டனில் மீட்கப்பட்ட சிலைகள் அனந்தமங்கலத்தில் ஒப்படைப்பு

மயிலாடுதுறை:லண்டனில் மீட்கப்பட்ட சுவாமி சிலைகள், நேற்று அனந்தமங்கலம் ராஜகோபால சுவாமி கோவிலுக்கு கொண்டு வரப்பட்டன.

நாகை மாவட்டம், பொறையாறு அருகே, அனந்தமங்கலத்தில், ராஜகோபால சுவாமி கோவில் உள்ளது. கோவிலின் மகா மண்டபத்தில் இருந்த ராமர், லட்சுமணர், சீதை மற்றும் அனுமன் ஆகிய நான்கு பழமையான சிலைகள், 1978ம் ஆண்டு நவம்பர், 23ம் தேதி திருட்டு போனது.இவ்வழக்கு, 1988ம் ஆண்டு ஜனவரி, 25ம் தேதி, சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்டது.

திருட்டு போன ராமர், லட்சுமணர், சீதை சிலைகள், லண்டனில் இருப்பதை கண்டறிந்த தமிழக சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், அதற்கான ஆதாரங்களை, பிரிட்டன் அரசுக்கு அனுப்பினர்.லண்டன் போலீசார் சிலைகளை மீட்டு,இந்திய துாதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இந்தியா கொண்டு வரப்பட்ட சிலைகள், தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டன.

நேற்று முன்தினம் இரவு கும்பகோணம் சிலைகள் காப்பகத்திற்கு கொண்டு வரப்பட்ட சிலைகள், நேற்று காலை, அனந்தமங்கலம் எடுத்துவரப்பட்டன.அப்பகுதி மக்கள், மங்கள இசை முழங்க வரவேற்று, சிலைகளை கோவிலில் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து, சிலைகள் பாதுகாப்பாக, கோவிலுக்குள் வைத்து பூட்டப்பட்டன. அப்பகுதி மக்கள், ஆஞ்சநேயர் சிலையையும் மீட்டுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
natarajan s - chennai,இந்தியா
22-நவ-202007:16:19 IST Report Abuse
natarajan s இந்த திருட்டு நடந்த காலத்தில் ஆட்சியில் இருந்தது எம்ஜியார், அப்போது ஒரு திமுக MLA வீட்டில் இருந்து சில சிலைகள் மீட்கப்பட்டன, உடனடியாக அவர் அதிமுகவில் சேர்வதாக அறிவித்தார், அதோடு முடிந்தது வழக்கு. இவர்களை நம்பித்தான் தமிழகம் உள்ளது. நமது பொக்கிஷங்களை கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் வெளிநாட்டினருக்கு விற்பது நம்மை நாமே ஏமாற்றுவதற்கு சமம். சிலை திருட்டு ஆரம்பித்தது 1971 க்கு பிறகு தான். அதற்கு முன் 1951 இல் ஒரு சிலை திருட்டு நடந்து ஒரு வருடத்திற்குள் மீட்கப்பட்டு விட்டது.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
22-நவ-202004:25:33 IST Report Abuse
J.V. Iyer இதுபோன்ற சிலைகளை கடத்தியவர்கள் யார், அவர்கள் பின்புலம் என்ன என்பதை மக்களுக்கு சொல்லுங்கள். அறநிலைய துறை மக்களை பாதுகாக்கவேண்டாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X