சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'ஆன்லைன்' சூதாட்டம் 34 பேர் கைது

Added : நவ 22, 2020
Share
Advertisement
ஊட்டி:ஊட்டியில், 'ஆன்லைன்' சூதாட்டத்தில் ஈடுபட்ட, 34 பேரை போலீசார் கைது செய்தனர்.நீலகிரி மாவட்டம், ஊட்டி, கூட்செட் ரோட்டில் உள்ள தனியார் காட்டேஜில் 'ஆன்லைன்' சூதாட்டம் நடப்பதாக, எஸ்.பி., அலுவலகத்துக்கு, ரகசிய தகவல் கிடைத்தது. எஸ்.பி., சசிமோகன் உத்தரவின் பேரில், ஊட்டி ஜி1 போலீசார் காட்டேஜை சுற்றி வளைத்தனர்.போலீசார் உள்ளே சென்ற போது, பெங்களூருவில் நடந்த குதிரை

ஊட்டி:ஊட்டியில், 'ஆன்லைன்' சூதாட்டத்தில் ஈடுபட்ட, 34 பேரை போலீசார் கைது செய்தனர்.

நீலகிரி மாவட்டம், ஊட்டி, கூட்செட் ரோட்டில் உள்ள தனியார் காட்டேஜில் 'ஆன்லைன்' சூதாட்டம் நடப்பதாக, எஸ்.பி., அலுவலகத்துக்கு, ரகசிய தகவல் கிடைத்தது. எஸ்.பி., சசிமோகன் உத்தரவின் பேரில், ஊட்டி ஜி1 போலீசார் காட்டேஜை சுற்றி வளைத்தனர்.

போலீசார் உள்ளே சென்ற போது, பெங்களூருவில் நடந்த குதிரை பந்தயத்துக்கு, ஒரு அறையில் பணம் கட்டி சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததும், வேறு அறைகளில் பணம் கட்டி, ரம்மி விளையாட்டு நடந்ததும் தெரியவந்தது. இது, தொடர்பாக, காட்டேஜ் உரிமையாளர் பாலாஜி உட்பட, 34 பேர் கைது செய்யப்பட்டனர். 1.50 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X