பொது செய்தி

தமிழ்நாடு

மழையில் பயிர்களை பாதுகாப்பது எப்படி

Added : நவ 22, 2020
Share
Advertisement
மதுரை : ''அதிக மழை மற்றும் காற்றால் மரங்கள் வேரோடு சாய்ந்து விடும். எனவே அறுவடைக்கு தயாராக இருக்கும் மரங்களில் பழங்களை அறுவடை செய்து அவற்றின் சுமையை குறைக்கலாம்'' என தோட்டக்கலை துணை இயக்குனர் ரேவதி தெரிவித்தார். அவர் கூறியதாவது: மழையால் ஏற்படும் உபரிநீர் வடிந்தபின் நடவு மற்றும் விதைப்பு பணிகளை துவக்கலாம். வடிகால் வசதி இல்லாவிட்டால் நிலத்தில் ஆங்காங்கே

மதுரை : ''அதிக மழை மற்றும் காற்றால் மரங்கள் வேரோடு சாய்ந்து விடும். எனவே அறுவடைக்கு தயாராக இருக்கும் மரங்களில் பழங்களை அறுவடை செய்து அவற்றின் சுமையை குறைக்கலாம்'' என தோட்டக்கலை துணை இயக்குனர் ரேவதி தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: மழையால் ஏற்படும் உபரிநீர் வடிந்தபின் நடவு மற்றும் விதைப்பு பணிகளை துவக்கலாம். வடிகால் வசதி இல்லாவிட்டால் நிலத்தில் ஆங்காங்கே வடிகால் அமைத்து மழைநீரை வடிக்க வேண்டும். காற்று வீசும் திசைக்கு எதிர் திசையில் குச்சிகளால் முட்டு கொடுத்தால் செடிகள் சாயாமல் பாதுகாக்கலாம். மரங்களை சுற்றி மண் அணைக்க வேண்டும். மழைநீர் வடிந்தபின் பயிர்களுக்கு ஏற்றவாறு மேல் உரம் இட்டு மண் அணைக்க வேண்டும். இலைவழி உரம் கொடுத்து பயிரின் ஊட்டச்சத்தை பராமரிக்கலாம்.பசுமை குடிலின் அடிபாகம் நிலத்துடன் கம்பி களால் இணைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். கதவு, ஜன்னல்களை மூடி உட்பகுதியில் காற்று புகாத வண்ணம் அமைக்க வேண்டும்.

குடிலைச் சுற்றி உயிர்வேலி அமைக்கலாம். குடிலின் அருகில் பட்டுப் போன மரங்கள் இருந்தால் அதை அகற்ற வேண்டும். நிழல் வலை குடிலில் கிழிந்து போன பகுதிகளை சரிசெய்து, நிலத்துடன் கம்பிகளை உறுதியாக இணைக்க வேண்டும்.மா, கொய்யா, மாதுளை மரங்களின் கிளைகளை கவாத்து செய்து விட்டால் காற்றோட்டம் கிடைக்கும் மரங்கள் சாயாது. பூஞ்சாண நோய்களை தடுக்க நோய் தடுப்பு மருந்து தெளிக்க வேண்டும். வாழையில் கீழ்மட்ட இலைகளை அகற்ற வேண்டும். 75 சதவீதம் முதிர்ந்த தார்களை அறுவடை செய்யலாம். காய்கறிகள், பந்தல் காய்கறிகள், பூப் பயிர்களில் வடிகால் வசதி ஏற்படுத்தி டிரைகோடெர்மா விரிடி பூஞ்சாண உயிர் கொல்லியை நிலத்தில் தெளிக்க வேண்டும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X