பொது செய்தி

தமிழ்நாடு

494 புதிய தமிழ் சொற்கள் கண்டுபிடிப்பு

Added : நவ 22, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:அகரமுதலி இயக்கம் சார்பில், தமிழில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட, 494 கலைச்சொற்கள் ஏற்கப்பட்டுள்ளன.அகர முதலி இயக்ககத்தின், 72வது கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. அதில், 'கவிதை உறவு' இதழின் ஆசிரியர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன், ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தின் இயக்குனர் தமிழ் இயலன், புலவர் மதியழகன், கவிஞர்கள் சீனி, பழனி, ஞால ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதில்,

சென்னை:அகரமுதலி இயக்கம் சார்பில், தமிழில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட, 494 கலைச்சொற்கள் ஏற்கப்பட்டுள்ளன.

அகர முதலி இயக்ககத்தின், 72வது கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. அதில், 'கவிதை உறவு' இதழின் ஆசிரியர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன், ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தின் இயக்குனர் தமிழ் இயலன், புலவர் மதியழகன், கவிஞர்கள் சீனி, பழனி, ஞால ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதில், வங்கியில் பயன்படுத்தப்படும் பிறமொழி சொற்களுக்கு இணையான தமிழ் கலைச் சொற்களை உருவாக்குவது குறித்து ஆராயப்பட்டது.

பிறமொழி கலப்பில்லாமல் பேசுவது, எழுதுவதன் அவசியம் குறித்து பேசிய ஏர்வாடி ராதாகிருஷ்ணன், வங்கியியல் சார்ந்த, 15 ஆயிரம் கலைச்சொற்களை உருவாக்கி, கலைச்சொல் அகராதி தயாரித்ததாக கூறினார்.இக்கூட்டத்தில், அகரமுதலி திட்ட இயக்ககத்தின் சார்பில் உருவாக்கப்பட்ட, 500 புதிய தமிழ் கலைச் சொற்களில், 494 சொற்களுக்கு, அறிஞர்கள் ஒப்புதல் வழங்கினர். ஏற்கனவே, 19 ஆயிரம் புதிய கலைச்சொற்கள் ஏற்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், 3,700 சொற்கள் அரசாணையாகும் தருவாயில் உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-நவ-202011:51:19 IST Report Abuse
வேதவல்லி sun Tvயில் வரும் நல்ல காலம் பிறக்குது ராசி பலன்கள் நிகழ்ச்சியில் வரும் கணவன்மனைவிக்கு இடையே வாக்குவாதம் வரலாம், ஏழு மணிக்குள் கோயில் செல்ல வேண்டும். இதுபோல் இடையே, மணிக்குள் என்பதற்கு பதில் குள்ளார என்று சுமார் இருபது முறை கூறுவார். அந்த வார்த்தை சரியா என்று கலோக்கியல் என்றாலும்தமிழ் அறிஞர்கள் தயை கூர்ந்து விளக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X