பொது செய்தி

தமிழ்நாடு

மதுரையில் தெய்வீக தமிழகம் சங்கம் வீட்டு தொடர்பு பிரசாரம் தீவிரம்

Added : நவ 22, 2020
Share
Advertisement
: மதுரை : ஹிந்து பெருமையை உணர வைக்கும் நோக்கத்தில் தெய்வீக தமிழகம்சங்கம் வீட்டு தொடர்பு பிரசாரம் மதுரை மாவட்டத்தில் தீவிரமாக நடந்து வருகிறது. எஸ்.எஸ்.காலனியில் ஆர்.எஸ்.எஸ்., சார்பில் இப்பிரசாரத்தை சின்மயா மிஷன் சிவயோகானந்தா துவக்கி வைத்தார். மாநில இணை செயலாளர் சீனிவாசன், கோட்ட அமைப்பாளர் முத்துக்குமார் மற்றும் நிர்வாகிகள் வீடு வீடாக சென்று கையேடுகளை

: மதுரை : ஹிந்து பெருமையை உணர வைக்கும் நோக்கத்தில் தெய்வீக தமிழகம்சங்கம் வீட்டு தொடர்பு பிரசாரம் மதுரை மாவட்டத்தில் தீவிரமாக நடந்து வருகிறது.

எஸ்.எஸ்.காலனியில் ஆர்.எஸ்.எஸ்., சார்பில் இப்பிரசாரத்தை சின்மயா மிஷன் சிவயோகானந்தா துவக்கி வைத்தார். மாநில இணை செயலாளர் சீனிவாசன், கோட்ட அமைப்பாளர் முத்துக்குமார் மற்றும் நிர்வாகிகள் வீடு வீடாக சென்று கையேடுகளை வழங்கினர்.எல்லீஸ்நகரில் பா.ஜ., மகளிரணி நிர்வாகி கவிதா, அரசு தொடர்பு பிரிவு நிர்வாகி சதீஷ், வர்த்தக பிரிவு செயலாளர் சகாதேவன் உள்ளிட்டோர், சம்மட்டிபுரத்தில் மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நிர்வாகிகள்வீடுகளில் இப்பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

புறநகர் மாவட்ட பா.ஜ., சார்பில் கருப்பாயூரணியில்மாவட்ட தலைவர் சுசீந்திரன் தலைமையில் நிர்வாகிகள் ஈடுபட்டனர்.நிர்வாகிகள் கூறியதாவது: தமிழ் வளர்ந்திட, தமிழகம் செழித்திட தெய்வீக தமிழகம் சங்கம் பிரசாரம் உறுதி கொண்டுஉள்ளது. ஹிந்துக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரே சிந்தனை கொண்ட சமுதாயமாக பாரத தேசத்தை வழிநடத்தக்கூடிய சமுதாயமாக மாற்ற வேண்டிய கட்டத்தில் தமிழகம் உள்ளது. இதற்காக இப்பிரசாரம் மதுரை மாவட்டத்தில் 28 லட்சம் வீடுகளில் டிச., 6 வரை மேற்கொள்ளப்படவுள்ளது என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X