பொது செய்தி

தமிழ்நாடு

தீபாவளிக்கு சிறப்பு பஸ்கள் ரூ.5.84 கோடி வருவாய்

Added : நவ 22, 2020
Share
Advertisement
சென்னை:தீபாவளிக்கு இயக்கப்பட்ட அரசு சிறப்பு பஸ்கள் வாயிலாக, 5.84 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.இது குறித்து, சென்னை மாநகர் போக்குவரத்து கழக, மக்கள் தொடர்பு இணை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி:தீபாவளிக்கு முன், 11 முதல், 13ம் தேதி வரை, சென்னையில் இருந்து, 8,753 பஸ்கள் இயக்கப்பட்டதில், 3 லட்சத்து, 97 ஆயிரத்து, 553 பேர் பயணித்தனர். தமிழகத்தின் மற்ற ஊர்களில் இருந்து, 4,564 சிறப்பு பஸ்கள்

சென்னை:தீபாவளிக்கு இயக்கப்பட்ட அரசு சிறப்பு பஸ்கள் வாயிலாக, 5.84 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

இது குறித்து, சென்னை மாநகர் போக்குவரத்து கழக, மக்கள் தொடர்பு இணை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி:தீபாவளிக்கு முன், 11 முதல், 13ம் தேதி வரை, சென்னையில் இருந்து, 8,753 பஸ்கள் இயக்கப்பட்டதில், 3 லட்சத்து, 97 ஆயிரத்து, 553 பேர் பயணித்தனர். தமிழகத்தின் மற்ற ஊர்களில் இருந்து, 4,564 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டதில், 2 லட்சத்து, 28 ஆயிரம் பேர் பயணித்தனர்.

அதாவது, தீபாவளிக்கு முன், தொலைதுாரங்களுக்கு இயக்கப்பட்ட, 13 ஆயிரத்து, 317 பஸ்களில், ஆறு லட்சத்து, 25 ஆயிரத்து, 553 பேர் பயணித்தனர்.தீபாவளிக்கு பின், 15ம் தேதி முதல், 18ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 10 ஆயிரத்து, 414 பஸ்கள் இயக்கப்பட்டன. அவற்றில், 4 லட்சத்து, 68 ஆயிரம் பேர் சென்னை திரும்பினர்.

அதேபோல, பல்வேறு ஊர்களுக்கு, 4,629 பஸ்கள் இயக்கப்பட்டதில், 2 லட்சத்து, 31 ஆயிரம் பேர் பயணித்தனர். அதாவது, தீபாவளிக்குப் பின், 15 ஆயிரத்து, 43 பஸ்கள் இயக்கப்பட்டதில், ஆறு லட்சத்து, 99 ஆயிரம் பேர் பயணித்தனர்.

இந்தவகையில், தீபாவளிக்காக, ஏழு நாட்கள் இயக்கப்பட்ட, 28 ஆயிரத்து, 360 பஸ்களில், 13 லட்சத்து, 24 ஆயிரத்து, 553 பேர் பயணித்தனர். இவர்களில், 21 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து பயணித்தனர். தீபாவளிக்காக இயக்கப்பட்ட பஸ்கள் வாயிலாக, போக்குவரத்து கழகங்களுக்கு, 5.84 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X