தமிழ்நாடு

மதுரையில் கொரோனாவை துரத்தியடிக்க 'மந்தை எதிர்ப்பு சக்தி' உருவாகிவிட்டதா

Updated : நவ 22, 2020 | Added : நவ 22, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
மதுரை : மதுரை மாவட்டத்தில் நேற்று காலை வரை 19,457 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 436 பேர் பலியாகியுள்ளனர். நகரில் மட்டும் 13,500 பேர் வரை கொரோனா தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் அரசு மேற்கொண்ட செரோ சர்வேயில் மதுரை நகரில் மட்டும் 42 சதவீதம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என தெரிய வந்துள்ளது.அதாவது, 7.14 லட்சம் பேர் வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி
 மதுரையில் கொரோனாவை துரத்தியடிக்க 'மந்தை எதிர்ப்பு சக்தி' உருவாகிவிட்டதா

மதுரை : மதுரை மாவட்டத்தில் நேற்று காலை வரை 19,457 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 436 பேர் பலியாகியுள்ளனர்.

நகரில் மட்டும் 13,500 பேர் வரை கொரோனா தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் அரசு மேற்கொண்ட செரோ சர்வேயில் மதுரை நகரில் மட்டும் 42 சதவீதம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என தெரிய வந்துள்ளது.அதாவது, 7.14 லட்சம் பேர் வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். இவர்கள் அனைவரிடமும் கொரோனாவிற்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உற்பத்தியாகி விட்டது என்று அர்த்தம் நகரில் மந்தை எதிர்ப்பு சக்தி உருவாகி விட்டதா, 2வது அலை மதுரையை அசைத்து பார்க்குமா என்பதற்கு நிபுணர்கள் தரும் விளக்கத்தை பார்க்கலாம்.


தடுப்பூசிதான் தீர்வாக இருக்கும்


டாக்டர் செந்தில், கொரோனா சிகிச்சைக்குழு தலைவர், மதுரை அரசு மருத்துவமனை: கொரோனாவில் இருந்து உலகம் பாதுகாப்பான நிலையை அடைய மந்தை எதிர்ப்பு சக்தி வரவேண்டும். அதாவது 60-70 சதவீதம் பேர் இந்த வைரஸை எதிர்த்து போரிடும் எதிர்ப்பு சக்தியை பெறவேண்டும். வைரஸால் பாதிக்கப்பட்டு தானாகவோ அல்லது தடுப்பூசி மூலமாகவோ மந்தை எதிர்ப்பு சக்தியை உருவாக்கலாம். ஆனால் இதுவரை எந்த தொற்று நோய்க்கும் தானாகவே மந்தை எதிர்ப்பு சக்தி வந்ததில்லை. தடுப்பூசிகள் மூலமாகவே சாத்தியப்பட்டிருக்கிறது. கிளினிக்கல் பாதிப்பு (பரிசோதனை மூலம் கொரோனாவால் பாதித்தோர் என உறுதி செய்யப்பட்டவர்கள்) என்பது இதுவரை ஒரு சதவீதத்திற்கும் குறைவுதான். தங்களுக்கு தெரியாமலேயே வைரஸை ஏற்று மீண்டவர்கள் இதை விட 10 மடங்கு அதிகமாக இருக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

அப்படி பார்த்தால் உலகளவில் 10 சதவீதம் மக்கள் வரை வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும். மந்தை எதிர்ப்பு சக்தி உருவாக இது போதாது. மதுரை நகரில் 42 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக சர்வே மூலம் கணிக்கப் பட்டுள்ளது.இது துல்லியமானதாக இருப்பின் நிச்சயம் மகிழ்ச்சியான செய்தி தான். அதற்காக 2வது அலை வராது என்ற உத்தரவாதம் கிடையாது. வந்தாலும் கவலைப்படும் படியான பாதிப்புகள் இருக்காது. எளிதில் சமாளிக்க முடியும். இவை அனைத்தும் இப்போதுள்ள கொரோனா வைரசுக்கு தான் பொருந்தும். ஒருவேளை இந்த வைரஸ் மரபணு மாற்ற மடைந்தால் ஏற்கனவே பெற்ற நோய் எதிர்ப்பு சக்தி வேலை செய்யாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.


2வது அலைக்கு வாய்ப்பில்லை


டாக்டர் சவுந்திரபாண்டியன், சிறுநீரக நிபுணர், அப்போலோ மருத்துவமனை: கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துவிட்டது. உலகளவில் இப்போது 2வது அலை பற்றிய பேச்சு மேலோங்கி இருக்கிறது. நமக்கு இன்னும் முதல் அலையே முடியவில்லை. வைரஸால் 40 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டாலே போதும் 2வது அலை பாதிக்காது என ஏற்கனவே தெரிவித்து வந்தேன். இப்போது மதுரை நகரில் மேற்கொள்ளப்பட்ட செரோ சர்வே மூலம் 42 சதவீதம் பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அப்படியென்றால் இவர்கள் அனைவருமே கொரோனாவிற்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றுவிட்டனர் என்று அர்த்தம். இது மிகவும் நல்ல செய்தி.சமீபத்தில் சென்னையில் மேற்கொண்ட சர்வேயில் 33 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கணிக்கப்பட்டது. இதுவும் குறைந்த அளவல்ல. நமக்கு ஓரளவு மந்தை எதிர்ப்பு சக்தி வந்துவிட்டது. எனவே இனி 2வது அலையை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. பாதிப்பு அங்கொன்றும் இங்கொன்றுமாக தான் இருக்கும். இனி ஊரடங்கு தேவையில்லை. ஆனால் கண்டிப்பாக சமூக இடைவெளி, முகக்கவசம், கை சுத்தம் பேணுவதை தொடர வேண்டும். இதில் அலட்சியம் கூடாது.


வைரஸின் மரபணு மாறினால் சிக்கல்


டாக்டர் யுவுராஜ், அவசர சிகிச்சை நிபுணர், வேலம்மாள் மருத்துவமனை: மதுரை நகரில் 42 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதால் மந்தை எதிர்ப்பு சக்தி உருவாகி விட்டதாக நிம்மதி அடைந்துவிட முடியாது. தொற்று பாதித்து அதன் மூலம் கிடைக்கும் எதிர்ப்பு திறனுக்கும் தடுப்பூசி மூலம் கிடைப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. நோய் தாக்கிய பிறகு கிடைக்கும் எதிர்ப்பு சக்தி வாழ்க்கை முழுவதும் உதவி செய்யாது. குறிப்பிட்ட காலத்திற்கு தான் பலன் தரும். ஏனென்றால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்கள் கூட மீண்டும் கொரோனா தாக்கி சிகிச்சைக்கு வருகின்றனர். இங்கிலாந்து,பிரான்ஸ் போன்ற நாடுகளை வைத்து பார்க்கும் போது இந்தியாவிற்கும் 2வது அலை வரும்.இது மதுரைக்கும் பொருந்தும். அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க பல மாதங்கள் ஆகும். அதுவரை எத்தனை அலை வேண்டுமானாலும் வரலாம். தடுப்பூசியாலும் நிரந்தர தீர்வு கிடைக்காது. ஆனால் ஒரு அலையை உடனடியாக தடுத்து நிறுத்தமுடியும்.கொரோனா என்பது வைரஸ் குடும்பத்தை சேர்ந்தது. பாக்டீரியா போன்று அல்ல, வைரஸால் மரபணுக்களை மாற்ற முடியும். ஒருவேளை கொரோனா வைரஸின் மரபணுக்கள் மாறி மீண்டும் பெருந்தொற்று பரவினால் இப்போதுள்ள தடுப்பூசி பலன் தராது. எனவே கொரோனாவிடம் இருந்து நிரந்தரமாக இந்த உலகம் எப்போது மீளும் என்பதற்கு இதுவரை விடையில்லை. இப்போதைக்கு நாம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் வழக்கமான பணிகளை மேற்கொள்வது மட்டுமே பாதுகாப்பை தரும்.


இது தான் மந்தை எதிர்ப்பு சக்தி


இதை ஆங்கிலத்தில் 'ஹெர்டு இம்யூனிட்டி' என்று அழைக்கின்றனர். அதாவது ஒரு குறிப்பிட்ட தொற்றுக்கு எதிராக பெரும்பான்மை மக்கள் எதிர்ப்பு சக்தி பெறுவதை இது குறிக்கும். இந்த அளவை எட்டிவிட்டால் போதும் தொற்றின் ஆட்டத்தை தோற்கடித்துவிட முடியும். சங்கிலித்தொடர் போன்று அடுத்தடுத்தவரை பாதிக்க முடியாது. இதற்கு 70 சதவீதம் பேர் எதிர்ப்பு சக்தி பெற வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். கொரோனாவை பொறுத்தவரை 50-60 சதவீதம் பேர் எதிர்ப்பாற்றல் பெற்றாலே மந்தை எதிர்ப்பு சக்தி உருவாகிவிடும் என உலக சுகாதார அமைப்பு விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மந்தை எதிர்ப்பு சக்தியை இரு வழிகளில் அடையலாம். ஒன்று தடுப்பூசி. மற்றொன்று நோய் தாக்குதலுக்கு ஆளாவது. 2வது வழியில் இதை அடைவது சாத்தியமா என்பதை அறிவதே செரோ சர்வேயின் நோக்கம்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jagan - Chennai,இலங்கை
22-நவ-202019:29:04 IST Report Abuse
jagan மதுரை மக்களை மந்தை என்பதா? விரைவில் போராட்டம் - இப்படிக்கு தீய முக போராட்டம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X