பொது செய்தி

தமிழ்நாடு

கேரள உள்ளாட்சி ஓட்டுச்சீட்டு தமிழில் அச்சிட வலியுறுத்தல்

Added : நவ 22, 2020
Share
Advertisement
பாலக்காடு:கேரள உள்ளாட்சி தேர்தலில், தமிழ் மக்கள் வசிக்கும் பகுதியில், தமிழிலும் ஓட்டுச் சீட்டு அச்சிட வேண்டும் என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.கேரளாவில், டிச., 8, 10, 14 தேதிகளில், மூன்று கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது. பாலக்காடு மாவட்டத்தில் சித்துார், பாலக்காடு தாலுகாக்கள் மற்றும் அட்டப்பாடி பகுதியில் தமிழ் மொழி சிறுபான்மை மக்கள் அதிகம் உள்ளனர். உள்ளாட்சி

பாலக்காடு:கேரள உள்ளாட்சி தேர்தலில், தமிழ் மக்கள் வசிக்கும் பகுதியில், தமிழிலும் ஓட்டுச் சீட்டு அச்சிட வேண்டும் என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கேரளாவில், டிச., 8, 10, 14 தேதிகளில், மூன்று கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது. பாலக்காடு மாவட்டத்தில் சித்துார், பாலக்காடு தாலுகாக்கள் மற்றும் அட்டப்பாடி பகுதியில் தமிழ் மொழி சிறுபான்மை மக்கள் அதிகம் உள்ளனர். உள்ளாட்சி தேர்தல் ஓட்டுச்சீட்டுகள், தமிழ் மொழியிலும் அச்சிடப்பட வேண்டும் என்று தமிழ் மொழி பேசும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கேரள மாநில தமிழ் பாதுகாப்பு இயக்கம் பொதுச்செயலாளர் பேச்சிமுத்து கூறுகையில், ''பாலக்காடு நகராட்சி, எருதேம்பதி, கொழிஞ்சாம்பாறை, முதலமடை, பெருமாட்டி, வடகரபதி, அகளி, சோலையூர், புதுார் ஆகிய இடங்களில், தமிழ் சிறுபான்மையினர் பரவலாக உள்ளனர். வாக்காளர் பட்டியலில் தமிழ் மொழியை உட்படுத்தவில்லை. குறைந்தபட்சம் ஓட்டுச்சீட்டு அச்சிடும்போது, தமிழ் மொழி பேசும் மக்களை, அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.

கலெக்டர் தலைமையில் மாவட்ட அளவிலான மொழி சிறுபான்மை பாதுகாப்பு குழு கூட்டம், எல்லா ஆண்டும் நடத்துவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு நடக்கவில்லை,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X