பொது செய்தி

தமிழ்நாடு

லோகோ பெயர் கூறுவதில் மாணவர் உலக சாதனை

Added : நவ 22, 2020
Share
Advertisement
மதுரை : மதுரை யு.கே.ஜி., மாணவர் பிரஜன் லோகோக்கள் கண்டறிந்து பெயர்கள் கூறி உலக சாதனை படைத்தார். மதுரை கூடல்நகர் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த பிரவீன் - ஜனனி மகன் பிரஜன். இகாமர்ஸ், ஆட்டோமொபைல், வங்கிகள், தொலைதொடர்பு, எம்.என்.சி., உட்பட பல்வேறு துறைகளின் 208 லோகோக்களை 2.14 நிமிடங்களில் கண்டறிந்து பெயர்களை கூறி சாதனை படைத்தார்.பெற்றோர் கூறியதாவது: யூடியூப்பில் வித்தியாச சாதனை

மதுரை : மதுரை யு.கே.ஜி., மாணவர் பிரஜன் லோகோக்கள் கண்டறிந்து பெயர்கள் கூறி உலக சாதனை படைத்தார்.

மதுரை கூடல்நகர் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த பிரவீன் - ஜனனி மகன் பிரஜன். இகாமர்ஸ், ஆட்டோமொபைல், வங்கிகள், தொலைதொடர்பு, எம்.என்.சி., உட்பட பல்வேறு துறைகளின் 208 லோகோக்களை 2.14 நிமிடங்களில் கண்டறிந்து பெயர்களை கூறி சாதனை படைத்தார்.பெற்றோர் கூறியதாவது: யூடியூப்பில் வித்தியாச சாதனை வீடியோக்களை பார்த்தபோது இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் ஐந்து வயது மாணவர் 3.49 நிமிடங்களில் லோகோக்கள் பெயர் கூறியது சாதனையாக இருந்தது. அதை முறியடிக்க பயிற்சி கொடுத்தோம். அவரது சாதனை வீடியோவை ஹரியானாவில் உள்ள ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸூக்கு அனுப்பி வைத்தோம். 20 நாட்களில் அதை உறுதி செய்து 'கிராண்ட் மாஸ்டர்' டைட்டில் வழங்கியது மகிழ்ச்சியாக உள்ளது என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X