கிளப்புறாங்கய்யா...உலகம்

Added : நவ 22, 2020
Share
Advertisement
உலகின் பொறுமையான பூனைவியட்நாமை சேர்ந்த வின் க்வாங் பாம் என்ற நபர், குழந்தையை எப்படி குளிக்க வைக்க வேண்டும் என பூனைக்குட்டியை வைத்து செய்முறை விளக்கம் அளிக்கும் வீடியோ, பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. விரைவில் தாத்தா ஆக போகும் அந்த நபர், தன் மகனுக்கு குழந்தையை எப்படி குளிக்க வைக்க வேண்டும் என விளக்குகிறார். இதற்கு, பூனைக்குட்டியை குழந்தையை போல ஏந்தி,

உலகின் பொறுமையான பூனை

வியட்நாமை சேர்ந்த வின் க்வாங் பாம் என்ற நபர், குழந்தையை எப்படி குளிக்க வைக்க வேண்டும் என பூனைக்குட்டியை வைத்து செய்முறை விளக்கம் அளிக்கும் வீடியோ, பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. விரைவில் தாத்தா ஆக போகும் அந்த நபர், தன் மகனுக்கு குழந்தையை எப்படி குளிக்க வைக்க வேண்டும் என விளக்குகிறார். இதற்கு, பூனைக்குட்டியை குழந்தையை போல ஏந்தி, ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் வைத்து, ஒரு கையில் தலையை பிடித்துவிட்டு, மறுகையில் தேய்த்து விடுகிறார். வீடியோ முழுவதும் பூனை ஆடாமல், அசையாமல் இருக்கிறது. உலகிலேயே மிகவும் பொறுமையான பூனை இதுதான் என, இணையவாசிகள் தங்கள் பதிவிட்டுள்ளனர்.

தந்தை அளித்த உத்வேகம்

குழந்தைகளின் வெற்றிக்கு, பெற்றோர் அளிக்கும் உற்சாகம் எந்தளவுக்கு முக்கியம் என காட்டும் தந்தை - மகள் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. ஜிம் ஒன்றில் சிறுமி ஒருவர், எடையை துாக்குவதற்கு மிகவும் சிரமப்பட்டு கொண்டிருக்கிறார். அங்கு வரும் அவரது தந்தை, சிறுமியை உற்சாகப்படுத்துவதுடன், வழிகாட்டுதலையும் வழங்குகிறார். சில நிமிடங்களில், சிறுமி ஒரளவு எடையை துாக்க, தொடர்ச்சியாக தந்தை உற்சாகமான வார்த்தைகளை சொல்ல சிறுமி முழுமையாக துாக்குகிறார். அமெரிக்காவின் பிரபல கூடைப்பந்து விளையாட்டு வீரர் ரெக்ஸ் சேப்மேன், தன் ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட, 'டிரெண்ட்' ஆனது.

ஒரு நாயின் பாசம்

மெத்தையில் துாங்கி கொண்டிருக்கும் குழந்தைக்கு அருகில், மில்லி என்ற செல்ல நாய் உறங்கி கொண்டிருக்கிறது. அப்போது, குழந்தையின் தந்தை, நாயை படுக்கையை விட்டு இறங்க சொல்கிறார். ஆனால், இறங்க மறுக்கும் நாய், குழந்தையுடன் ஆரத்தழுவி நிம்மதியாக துாங்குகிறது. குழந்தையின் தந்தையால் எடுக்கப்பட்ட இந்த, 29 வினாடி வீடியோவை, 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். மிகவும் அழகான காட்சி, விலங்குகளை போல இனிமையான குணம் படைத்தவை எதுவும் இல்லை என வலைதளவாசிகள் கருத்து பதிவிட்டுள்ளனர்.

கூரையை பிய்த்த அதிர்ஷ்டம்

அதிர்ஷ்டம் இருந்தால், கூரையை பிய்த்துக் கொண்டு கூட பணம் கொட்டும் என்பார்கள். இந்தோனேசியாவை சேர்ந்த நபருக்கு நிஜத்திலே நடந்துள்ளது. சவப்பெட்டி தயாரிக்கும் தொழில் செய்துவருபவர், ஜோஸ்வா. இவர், வீட்டுக்கு அருகில் வேலை செய்துகொண்டிருக்க, பெரிய சத்தத்துடன் அவரது வீட்டு கூரை இடிந்து விழும் சத்தம் கேட்டுள்ளது. வீட்டுக்கு சென்று பார்த்த போது, 2.1 கிலோ எடையுள்ள விண்கல், ஜோஸ்வாவின் கூரையை பிய்த்துக்கொண்டு விழுந்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த விண்கல் ஆய்வாளர் ஜாரெட் காலின்ஸ், அதைபெரிய விலை கொடுத்து வாங்கியுள்ளார். விண்கல்லின் உண்மையான விலை தெரியவில்லை என்றாலும், 10 லட்சம் டாலருக்கு மேல் இருக்கும் என, அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X