பொது செய்தி

தமிழ்நாடு

நெல்லில் குலைநோய் தடுப்பது அவசியம்

Added : நவ 22, 2020
Share
Advertisement
மதுரை : ''தற்போதுள்ள மழைச்சூழலில் நெற்பயிர்களை குலைநோய் தாக்கி வருவதால் 15 நாட்களுக்கு ஒருமுறை தடுப்பு மருந்து தெளிக்க வேண்டும்'' என வேளாண் உதவி இயக்குனர் கமலாலட்சுமி தெரிவித்தார். அவர் கூறியதாவது:மதுரை மேற்கு, கிழக்கு வட்டாரத்தில் குலைநோய் தாக்குதலால் இலைகள் பழுப்பு நிற கண்வடிவ புள்ளிகளாக காணப்படும். மழை மற்றும் காற்றின் ஈரப்பதம் அதிகம் இருப்பதால் நோயின்

மதுரை : ''தற்போதுள்ள மழைச்சூழலில் நெற்பயிர்களை குலைநோய் தாக்கி வருவதால் 15 நாட்களுக்கு ஒருமுறை தடுப்பு மருந்து தெளிக்க வேண்டும்'' என வேளாண் உதவி இயக்குனர் கமலாலட்சுமி தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:மதுரை மேற்கு, கிழக்கு வட்டாரத்தில் குலைநோய் தாக்குதலால் இலைகள் பழுப்பு நிற கண்வடிவ புள்ளிகளாக காணப்படும். மழை மற்றும் காற்றின் ஈரப்பதம் அதிகம் இருப்பதால் நோயின் தாக்குதல் தீவிரமடையும். மகசூல் பாதிக்கப்படும். இவை காற்றின் மூலம் பரவுவதால் அறிகுறி தென்பட்டவுடன் வயலில்தண்ணீரை வடித்து விட்டு தழைச்சத்து உரமிடுதலை தவிர்க்கவேண்டும். வரப்பு மற்றும் வாய்க்கால்களைகளை அகற்ற வேண்டும். ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் 200 கிராம் சூடோமோனாஸ்புளோரசன்ஸ் உயிர்க்காரணியை கலந்து தெளிக்க வேண்டும்.குலைநோய் தாக்குதல் தென்பட்டால் ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் 200 கிராம் கார்பன்டைசிம்,

டிரை சைக்ளோசோல், 200 மில்லி மெட்டமினோ ஸ்ட்ரோபின் ஏதாவது ஒன்றை கலந்து தெளிக்க வேண்டும். இது கிடைக்காத பட்சத்தில் டெபுகோனோசோல் 300 கிராம் அல்லதுமேன்கோசெப் 600 கிராம் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்கவேண்டும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X