சென்னை: வாடகை வாகனங்களுக்கு, ஜி.பி.எஸ்., கருவி பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, வட்டார போக்குவரத்து அதிகாரிகள், மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கு, போக்குவரத்து கமிஷனர் ஜவஹர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:மோட்டார் வாகன சட்டப்படி, போக்குவரத்து வாகனங்களில், அவற்றின் இருப்பிடத்தை அறியும் வகையில், ஜி.பி.எஸ்., கருவிகள் பொருத்த வேண்டும் என, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம், ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

வாகனங்களில் பொருத்தப்படும், அவசர கால பொத்தான்களை அழுத்தும் போது, இக்கருவிகள், வாகனத்தின் இருப்பிட விபரத்தை பற்றி, பாதுகாப்பு துறையினருக்கு குறுந்தகவல் அனுப்பும். இரு சக்கர வாகனங்கள், ரிக் ஷா போன்ற வாகனங்களுக்கு, ஜி.பி.எஸ்., கருவிகள் பொருத்துவது அவசியமில்லை.தமிழகத்தில், 'வாகன்' மென்பொருள் ஏற்கும் வகையில், எட்டு நிறுவன கருவிகள் அங்கீ கரிக்கப்பட்டு உள்ளன. அக்கருவிகளின் தரம் ஏற்கனவே சோதிக்கப்பட்டுள்ளதால், அவற்றை மட்டுமே, போக்குவரத்து வாகனங்களில் பொருத்த அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE