சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஒரே மாதத்தில் 3-வது முறையாக மதுரையில் தீ விபத்து

Updated : நவ 22, 2020 | Added : நவ 22, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
மதுரை: மதுரையில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் மீண்டும் தீவிபத்து ஏற்பட்டது.மதுரை விளக்குத்தூண் பகுதியில் உள்ள தனியார் ஜவுளிக்கடை ஒன்றின் குடோனில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே கடந்த தீபாவளியன்று அதே பகுதியில் உள்ள மற்றொரு ஜவுளிக்கடை ஒன்றில்
madurai, javuli store, fire accident, மதுரை, ஜவுளிக்கடை, தீவிபத்து

மதுரை: மதுரையில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் மீண்டும் தீவிபத்து ஏற்பட்டது.

மதுரை விளக்குத்தூண் பகுதியில் உள்ள தனியார் ஜவுளிக்கடை ஒன்றின் குடோனில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கனவே கடந்த தீபாவளியன்று அதே பகுதியில் உள்ள மற்றொரு ஜவுளிக்கடை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் தீயினை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட இரண்டு வீரர்கள் கட்டடம் இடிந்து இடிப்பாடுகளுக்கு இடையே சிக்கி உயிரிழந்தனர்.


latest tamil news


தற்போது ஏற்பட்டுள்ள தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஜவுளிகள் எரிந்து சேதமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரே வாரத்தில் இரு ஜவுளிக்கடைகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
22-நவ-202016:27:08 IST Report Abuse
கல்யாணராமன் சு. அது ஏன் மதுரை தீ விபத்து அப்படின்னு சொன்னாலே, திமுக நினைவுதான் வருது ? ஒருவேளை, பத்திரிக்கை தீ விபத்து நிகழ்வு மக்களை அலைக்கழிக்கிறதோ ?????????
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
22-நவ-202015:42:17 IST Report Abuse
Endrum Indian இதற்கு ஈடு இன்சூரன்ஸிலிருந்து கிடைக்காது என்று சொல்லுங்கள் எங்கும் ஒரு எரிப்பும் இருக்காது
Rate this:
Cancel
Sri,India - India,இந்தியா
22-நவ-202013:33:23 IST Report Abuse
 Sri,India மதுரை மஹால் பகுதி , கீழமாசி வீதி ,விளக்குத்தூண் பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் மிகப்பழமையானவை ....கீழமாசி வீதியில் எதாவது பெரும் தீ விபத்து ஏற்பட்டால் நிச்சயமாக மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் ஆபத்து உள்ளது என்பதை மறந்து விடாமல் அதிகாரிகள் நேர்மையாக செயல்பட்டு பழமையான கடைகளை முறைப்படுத்த வேண்டும் . லஞ்சம் கூட சுகாதாரமில்லாத பகுதிகளில் ஒன்று கீழமாசி வீதி . நோய் பரவும் அபாயமும் மிக அதிகம் .எப்படித் தான் மதுரை மக்கள் ??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X