பொது செய்தி

இந்தியா

கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு திறன் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

Updated : நவ 22, 2020 | Added : நவ 22, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
ஆமதாபாத்: ''இந்தியாவின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு திறன், அடுத்த ஐந்து ஆண்டுகளில், இரண்டு மடங்காக அதிகரிக்கும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது.காந்திநகரில் உள்ள பண்டிட் தீன்தயாள் பெட்ரோலியம் பல்கலையின் எட்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது.நடவடிக்கைவிழாவில், 'வீடியோ

ஆமதாபாத்: ''இந்தியாவின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு திறன், அடுத்த ஐந்து ஆண்டுகளில், இரண்டு மடங்காக அதிகரிக்கும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது.latest tamil news


காந்திநகரில் உள்ள பண்டிட் தீன்தயாள் பெட்ரோலியம் பல்கலையின் எட்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது.நடவடிக்கைவிழாவில், 'வீடியோ கான்பரன்சிங்' வழியாக பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது: நம் நாடு, தற்போது மாற்றத்தை நோக்கி செல்கிறது. கொரோனா பரவல் காலத்தில் பட்டம் பெற்றுள்ள நீங்கள், எரிசக்தி துறையில் காலடி வைக்கப் போகிறீர்கள். எரிசக்தி துறையில் பல வாய்ப்புகள் குவிந்துள்ளன. இந்த, 10 ஆண்டுகளில், எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில், கோடிக்கணக்கில் முதலீடுகள் செய்யப்பட உள்ளன. அதனால், ஆராய்ச்சி முதல் தயாரிப்பு வரை, எரிசக்திதுறையில் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. கார்பன் வெளியேற்றத்தை, 35 சதவீதம் குறைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன், நாம் முன்னேறி வருகிறோம்.

இந்த, 10 ஆண்டு காலத்தில், எரிசக்தி தேவைகளுக்கு, இயற்கை எரிவாயு பயன்பாட்டை, நான்கு மடங்கு அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.அடுத்த ஐந்து ஆண்டு களில், நம் நாட்டின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு திறனை இரு மடங்காக அதிகரிக்கவும், நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.'சுயசார்பு இந்தியா' இயக்கத்துக்கான போர் வீரர்களாக, மாணவர்கள் இருக்க வேண்டும். எதிர்கால இந்தியாவை வடிவமைக்கும் பொறுப்பு, மாணவர்களிடம் உள்ளது.தட்டுப்பாடுநம் நாடு, 2022ம் ஆண்டில், 75 வது சுதந்திர தினத்தையும், 2047ல், 100 வது சுதந்திர தினத்தையும் கொண்டாட உள்ளது.

இந்த, 25 ஆண்டுகள் தான், உங்களுக்கு கிடைத்த பொற்காலம். குஜராத் முதல்வராக நான் பொறுப்பேற்ற போது, மாநிலத்தில், மின்தட்டுப்பாடு அதிகமாக இருந்தது. வீட்டுக்கும், விவசாயத்துக்கும் என, மின்சாரத்தை தனியாக பிரித்து வினியோகிக்க நடவடிக்கை எடுத்தேன். இதனால், 24 மணி நேரமும், விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்குவது சாத்தியமாயிற்று.முன்பிருந்த செயல்பாடு களையே பின்பற்றியிருந்தால், 24 மணி நேரமும், மின்சாரம் வழங்கியிருக்க முடியாது.


latest tamil news


மேலும், மின்சாரத்தை, யூனிட், 13 ரூபாய்க்கு மாநில அரசு வாங்கிக் கொண்டிருந்தது. இதை மாற்ற வேண்டும் என நினைத்து, சூரிய மின்சக்தி உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. தற்போது குஜராத், மின்சாரத்தில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக உள்ளது. நான் முதல்வராக இருந்தபோது தான், பண்டிட் தீன்தயாள் பெட்ரோலிய பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.இதை பெட்ரோலிய பல்கலை என அழைப்பதை விட, எரிசக்தி பல்கலை என, அழைப்பது தான் சிறப்பாக இருக்கும். இவ்வாறு, பிரதமர் மோடி பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-நவ-202018:29:37 IST Report Abuse
ஆப்பு //எண்ணெய் சுத்திகரிப்பை இருமடங்க்காக்குவோம். கார்பன் வெளியேற்றத்தை 30 சதவீதம் குறைப்போம். // எப்படி சாத்தியம்னு புரியலை.
Rate this:
Cancel
Somiah M - chennai,இந்தியா
22-நவ-202011:48:06 IST Report Abuse
Somiah M அதுக்கெல்லாம் குறைச்சலில்லை ஆட்டுறா பூசாரி என்று தமிழகத்தில் ஒரு சொலவடை உண்டு. அது போல என்ன செய்து என்ன பயன் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஏறிக்கொண்டே போகிறதே .
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
22-நவ-202014:19:06 IST Report Abuse
 Muruga Velஎத்தனால் மற்றும் மூங்கில்கள் மூலம் எரிபொருள் தயாரிக்க டெக்னாலஜி முன்னேற்றம் குறித்து ஆராய்ச்சி செய்து பயன் பெறலாம் ..மிகப்பெரிய தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான பணிகளுக்கே பெட்ரோல் டீசல் பயன் படுத்த வேண்டும் ..வருமான வரி கார்பொரேட் வரி வசூல் குறைந்ததால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் பென்ஷன் ராணுவ செலவுகளை சமாளிக்க அரசாங்கத்துக்கு வருமானம் இல்லை ..பெட்ரோலிய வரிகள் தான் சமாளிக்கின்றன ..சைக்கிள் உபயோகம் பெறுக வேண்டும் ..குழந்தைகள் பெற்றுக்கொள்வதில் சிக்கனம் வேண்டும் .....
Rate this:
22-நவ-202014:27:56 IST Report Abuse
ஆரூர் ரங்ஏறினால்தான் நம் மக்கள் மின்சார வண்டிகளுக்கு மாறுவார். இன்னும் சொல்லப்போனால் 100 ரூபாய்க்காவது உயர்த்தவேண்டும்....
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
22-நவ-202011:29:27 IST Report Abuse
Malick Raja அய்யா மோடி அவர்களே .. காங்கிரஸ் ஆட்சியில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 170. டாலருக்கு விற்றபோது ரூ 67.க்கு பெட்ரோல் விற்றபோது மிகப்பெரும் போராட்டம் நடத்தியது தங்களுக்கு நினைவிருக்காது .. இப்போது கச்சா எண்ணெய் 40 டாலருக்கு விற்கும்போது பெட்ரோல் விலை ரூ 85. ஐ கடக்கப்போகிறதே இதாவது தெரியுமா ?
Rate this:
Venkat, UAE - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
22-நவ-202012:09:14 IST Report Abuse
Venkat, UAEஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 170. டாலருக்கு இது வரை உலக வரலாற்றிலேயே விற்றது கிடையாது....
Rate this:
22-நவ-202014:28:47 IST Report Abuse
ஆரூர் ரங்முக்கிய செய்தி பெட்ரோலுக்கான வரியில் பாதிக்கு மேல்😛 அதாவது 23 ரூபாய் வரை மாநில வரிகள்தான். முதலில் எதிர்கட்சி ஆளும் மாநிலங்களைக் குறைக்க வையுங்களேன் பார்ப்போம்...
Rate this:
22-நவ-202014:32:02 IST Report Abuse
ஆரூர் ரங்170 டாலர் ரீல் மன்னரே. 1947 இல் பெட்ரோல்😶 40- 50 பைசா. 2014 இல் காங்கிரஸ் ஒழிந்தபோது 72 ரூபாய்😥. இதற்குக் காரணம் யார் ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X