பொது செய்தி

தமிழ்நாடு

தாத்தாக்களுக்கு பதவியா; தி.மு.க.,வில் குமுறல்!

Updated : நவ 22, 2020 | Added : நவ 22, 2020 | கருத்துகள் (51)
Share
Advertisement
எண்பத்தி இரண்டு வயது, 73 வயதுக்காரர்களுக்கு, மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கப்படுவதால், தி.மு.க.,வில் திடீர் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:சமீபத்தில், சென்னை, மதுரை, தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள சட்டசபை தொகுதிகள் பிரிக்கப்பட்டு, கட்சி அமைப்பு ரீதியாக, புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.மதுரை மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளராக, 82

எண்பத்தி இரண்டு வயது, 73 வயதுக்காரர்களுக்கு, மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கப்படுவதால், தி.மு.க.,வில் திடீர் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.



latest tamil news




அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:சமீபத்தில், சென்னை, மதுரை, தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள சட்டசபை தொகுதிகள் பிரிக்கப்பட்டு, கட்சி அமைப்பு ரீதியாக, புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.மதுரை மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளராக, 82 வயதுள்ள முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். கொரோனா பரவல் காரணமாக, அவர் வெளியே செல்ல முடியாத நிலையில், கட்சி பணிகளையும், சட்டசபை தேர்தல் பணிகளையும், எப்படி கவனிக்க முடியும் என, கட்சியினர் கேள்வி எழுப்புகின்றனர். 'கட்சியில் இளைஞர்களுக்கு முன்னுரிமை தரப்படும்' என்றும், 'செயல்படாதவர்களை களையெடுப்பேன்' என்றும், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசுகிறார். அவரது பேச்சுக்கு முரணாக, அவரது செயல்பாடுகள் உள்ளதாக,மதுரை மாவட்ட, தி.மு.க., வினர் புலம்புகின்றனர்.


கிண்டல்



மதுரை மாநகரில், செல்லுார் பகுதி, 42வது வட்டச் செயலர் ராஜனுக்கு, 60 வயதாகி விட்டது என்ற காரணத்தை காட்டி, அவரது பதவி பறிக்கப்பட்டு, முகமது யாசின் என்பவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால், 82 வயதான பொன் முத்துராமலிங்கம் இளைஞரா என, தி.மு.க., நிர்வாகிகள், சமூக வலைதளங்களில் கிண்டல் செய்கின்றனர்.

பொன் முத்துராமலிங்கம், ம.தி.மு.க.,வில் இருந்தபோது, கருணாநிதியின் குடும்பத்தை கடுமையாக விமர்சித்தவர். அவருக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி தருவதற்கு, பொதுச்செயலர் துரைமுருகன் பரிந்துரை செய்துள்ளார். அதனால், துரைமுருகன் மீது, கட்சி நிர்வாகிகள் கடும் கோபத்தில் உள்ளனர்.தஞ்சாவூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள, ஏனாதி பாலசுப்பிரமணியத்திற்கு, 73 வயதாகிறது. இப்படி வயதானவர்களை வைத்து, கொரோனா காலத்தில், எப்படி கட்சி பணியாற்ற முடியும்; தினமும் பூத் நிர்வாகிகளை பார்க்க வேண்டும்; கட்சி நிர்வாகிகளை சந்திக்க வேண்டும்; பிரசாரத்திற்கு செல்ல வேண்டும்; கூட்டங்களை நடத்த வேண்டும்.


latest tamil news





புலம்பல்



இதுபோன்ற பணிகளை, வயதானவர்களால் எப்படி செய்ய முடியும்?தமிழகத்தில், 40 சதவீதம் வாக்காளர்கள், 35 வயதுக்கு கீழ் உள்ளனர். அவர்களை கவர்வதற்கு, இளைஞர்களுக்கு நிர்வாக பொறுப்பு வழங்க வேண்டும். அதைத் தவிர்த்து, வயதானவர்களுக்கு பொறுப்பு வழங்கினால், கட்சி மீண்டும் கருணாநிதி காலத்திற்கு தான் செல்லும்; உதயநிதி காலத்திற்கு வராது என, தொண்டர்கள் புலம்புகின்றனர் .இவ்வாறு கட்சி வட்டாரங்கள் கூறுன்றன.

உதயநிதி பிரசாரத்திற்கு தடை?

திருவாரூரில், தேர்தல் பிரசாரத்தை, இளைஞரணி செயலர் உதயநிதி துவக்கி உள்ளார். எந்த தொகுதியில், எந்த கட்சி போட்டி, யார் வேட்பாளர் என, முடிவு செய்யாத நிலையில், உதயநிதியை முன்னிலைப்படுத்தும் வகையில், இந்த பிரசார ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.கொரோனா தாக்கம், இன்னமும் முழுமையாக விலகவில்லை. 'கொரோனா பரவல் இரண்டாவது அலை ஏற்படும்; அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ஸ்டாலின், ஒரு பக்கம் அறிக்கை வெளியிடுகிறார்.

மற்றொரு பக்கம், உதயநிதியின் பிரசாரத்திற்கு ஆட்களை திரட்டும் பணிகளை செய்யுமாறு, கட்சியினருக்கு கட்டளை பிறப்பிக்கிறார். உதயநிதி பிரசாரம், கொரோனா பரவல் ஆபத்தில் தான் முடியும் என, மூத்த நிர்வாகிகள் எச்சரித்தும், உதயநிதி தரப்பினர் கேட்கவில்லை. நுாறு நாட்களுக்கு பிரசார பயணத்தை தயார் செய்து, அதை மாவட்ட செயலர்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. உதயநிதி பஙகேற்கும் நிகழ்ச்சிகள், மிக பிரமாண்டமாக இருக்க வேண்டும் என உத்தரவிடப்படுவதால், அதற்கு ஆகக்கூடிய செலவை நினைத்து, நிர்வாகிகள் கலக்கம் அடைந்துள்ளனர். - நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Prabhagharan - Madurai,ஓமன்
22-நவ-202018:15:10 IST Report Abuse
Prabhagharan ஸ்டாலின்...கேளுங்கள்
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
22-நவ-202017:39:33 IST Report Abuse
J.V. Iyer 68 வயது வரையில் சுடலை அவர்கள் இளைஞர் அணித்தலைவராக இருந்தாரே. எனவே திமுகவில் இளசுகளுக்கு பதவி இல்லை.
Rate this:
Cancel
22-நவ-202017:09:01 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு அதனாலதான் எங்க தொளபதி உதவா நிதியை இறக்கியிருக்காருங்கோவ்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X